திங்கள், 19 செப்டம்பர், 2016

அடங்கக்கூடியவர்கள் அல்ல யட்சிகள்

முகாந்திரங்கள் அறிந்தவன் அவன்
வெண் சாம்பல் மழையை பொழிந்து
கரும் புரவியில்
என் கானகம் அதிர வந்தவன்...
அவனுக்காக நான் காத்திருந்தேன்
அறிந்திருந்தான் அவன்
அனைத்தையும்...
எனக்காக அவன் எழுதிய கடிதங்கள்
இன்னும் என் உள்பெட்டியில்
பாதுகாப்பாக இருக்கிறது..
ஆனால், எதுவும் அவனுடையதாக இல்லை
புதியதாக அவன் எழுப்பும் கானகத்தில்
உருவாக்கும் சாம்பல் பட்சிகள்
தன் உதிரத்தால் வரலாறு எழுதிகொண்டிருக்கின்றன

என் மௌனத்தில் உறைந்திருக்கும்
அவனின் காமம்
எழுச்சியுற்றிருக்கும் சாளரக்கண்ணாடி
கண்களை மூன்றாவது முறையாக
மூடி திறக்கிறது..
ஜீவசுவாசமுள்ள அவன்
கடலை பற்றியும்
அதன் பச்சை நிறத்தைப்பற்றியும்
எழுதி எழுதி கிழித்தெரிகிறான்
யட்சிகள் காமத்திற்கு
அடங்கக்கூடியவர்கள் அல்ல...
-யோகி

1 கருத்து: