வெள்ளி, 30 செப்டம்பர், 2016

கோலாலம்பூரிலிருந்து ஈப்போ வரை 8

முதல் ரப்பர் மரம்


மலேசியாவில் முக்கிய விவசாயமாக ரப்பர் இருந்தது உலக மக்கள் பலருக்கு தெரிந்த ஒன்றுதான். மலேசியாவில் ரப்பர் மரம் என்றதும் அகிலன் எழுதிய ‘பால்மரக் காட்டினிலே’ என்ற நாவல் நினைவில் வருவதையும் பலரால் தவிர்க்க முடியாது. பால்மரக் காடுகளாக இருந்து, இந்தியர்களின் பல கதைகளைச் சுமந்திருந்த பேராக் மாநிலத்தில் பெரும் பகுதி அழிக்கப்பட்டுத் தொழிற்சாலைகளாக மாறிய பின்பும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் ரப்பர் தோட்டங்கள் இன்னும் பழைய சரித்திரத்தை ஞாபகப் படுத்துபவையாகவே இருக்கின்றன.


இந்நிலையில் மலேசியாவில் ரப்பர் வரலாறு 1877 ஆம் ஆண்டுத்
தொடங்குகிறது. பிரேசிலிருந்து கொண்டுவரப்பட்ட சில மரங்கள் முதன்முதலில் கோலகங்சாரில் நடப்பட்டன. அன்று தொடக்கம் மலேசியாவில் முக்கிய உற்பத்தி பொருளாக ஆனது ரப்பர் மரம்.

இந்த ஞாபகத்தைப் பதிவு செய்யும் வகையில் நூற்றாண்டுகளைக் கடந்து இன்னும் உயிர் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு ரப்பர் மரம்  கோலகங்சாரில் இருக்கிறது. தோழர் நாகேந்திரன் அங்கு அழைத்துப் போயிருந்தார். பால் கிண்ணம், உறைந்த ரப்பர் பாலை, சீட்டாகக் கொண்டு வரும் இரண்டு இயந்திரங்களோடு ரப்பர் விதைகள் சிதறிகிடக்கக் கம்பீரத்துடன் நிற்கிறது அந்தத் தாய் மரம்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக