ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

கோலாலம்பூரிலிருந்து ஈப்போ வரை 5

ஈப்போ ரயில் நிலையம்ஒரு தூர பயணத்தில் நானும் சிவாவும் ஈப்போ நகரை அடைந்திருந்தோம். தோழர் நாகேந்திரன் எங்களை ஈப்போ ரயில் நிலையத்திற்கு வந்துவிடுமாறு கூறியிருந்தார். தோழி மணிமொழியும், ஆதவன் தீட்சண்யா அண்ணாவும் கோலாலம்பூரிலிருந்து ஈப்போவிற்கு விரைவு ரயிலில் வந்து சேர்ந்திருந்தனர்.
ஈப்போ ரயில் நிலையத்தை நான் இப்போதுதான் முதற்முறையாகப் பார்த்தேன். பொதுவாகவே பிரிட்டிஷ் கட்டிடங்களைப் பார்க்கும்போது வரலாறு குறித்தான ஒரு பின்னோட்டம் தாமாகவே ஓட தொடங்குவதால் அதை அங்குல அங்குலமாகவே பார்வையால் உள்வாங்குவதே என்னையும் அறியாமல் நடந்துவிடுகிறது.
மலேசியாவில் பல பிரிட்டிஷ் கட்டடங்கள் அழிவை நோக்கிகொண்டிருக்கும் வேளையில், சில கட்டடங்கள் மிக அழகாக வெண்சாயம் பூசி பாதுகாக்கப்பட்டு வருவதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். உதாரணமாக HSBC வங்கியிருக்கும் கட்டடங்கள் பெருவாரியாகப் பிரிட்டிஷ் கட்டங்களாகத்தான் இருக்கின்றன.


மலேசியாவில் ரயில் என்ற வரலாறை எடுத்துக்கொண்டாலே பல வலிகளையும் பல்வகைக் கதைகளையும் பேசக்கூடியதாக இருக்கிறது. ரயில் நிலையங்களுக்கென்றே தனிப் பாரம்பரியமும் இருக்கிறது.
இன்று நவீனம், மேம்பாடு என்ற பெயர்களில் பல ரயில் நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டுவிட்ட வேளையில் 1917-ஆம் ஆண்டுக் கட்டப்பட்ட ஈப்போ ரயில் நிலையம் அதன் பழைய வடிவம் மாறாமல் அதே பிரிட்டிஷ் கட்டடத்தின் வாசம் தாங்கி நிற்கிறது. ஈப்போவில் பார்த்த முதல் இடமே வரலாறு பேசுபவையாக நல்ல தொடக்கமாகவே அமைந்தது.
ஈப்போ ரயில் நிலையத்தைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் பார்த்த ஏதோ ஒரு ரயில் கட்டடத்தை ஞாபக படுத்துபவையாக இருந்தது.

1 கருத்து: