ஆனால், 2010-ஆம் ஆண்டு நான் பிரபல 4 நட்சத்திர தங்கும் விடுதியில் கணக்காய்வாளராக வேலையில் அமர்ந்த போது, என் முன்னே இருக்கும் தொலைக்காட்சியில் ஆங்கில படங்கள் , மட்டுமே ஒளிபரப்பாக விதி அமைக்கப்பட்டிருந்தது.
எனக்கு ஆங்கிலப் படங்களே அவ்வளவாக பிடிக்காது என்று வைத்துக்கொள்ளுங்களேன். நவீன இலக்கிய பாணிக்கு வந்தப்பிறகு சில உலக சினிமாக்களை பார்த்திருக்கிறேன். உண்மையில் உலகச் சினிமாவின் தரத்தை மற்ற வெகுஜன சினிமாவோடு ஒப்பிடுவது நேர்மையற்றது என்ற கருத்தோடு உடன்படுபவள் நான்.
தனியார் தொலைக்காட்சியின் ஆங்கில பட அலைவரிசைகளை மாற்றி மாற்றி வைத்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். காலக்கொடுமை என்னவென்றால் ஒளிபரப்பிய படமே மீண்டும் மீண்டும் ஒரு வாரத்திற்கு ஒளிப்பரப்பாவதுதான். ஒரு படத்தை எத்தனை முறைதான் பார்ப்பது?
அந்தக் காலக்கட்டத்தில் ஆங்கில திரைப்பட நடிகர்களின் பெயர்கூட எனக்கு அவ்வளவாக தெரியாது. அந்தக் காலக்கட்டத்தில்தான் நடிகர் வில் ஸ்மித்தின் ‘Pursuit Of Happiness என்ற திரைப்படத்தைப் பார்த்தேன்.
ஒரு படத்தின் நாயகன் தொடக்கத்திலே என்னை ஈர்த்தான் என்றால் அது வில் ஸ்மித்தான். சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பேரழகன் இல்லை வில் ஸ்மித். ஆனால், நான் ஆங்கிலப் படம் பார்க்கும் மோகத்தை அதிகப்படுத்தியவன் அவனே.
நல்ல சிவப்பான அழகான ஆங்கில நடிகர்களும் குறிப்பாக டோம் குரூஸ், போன்றவர்களின் மீது உலக பெண்கள் ஆர்வம் கொண்டிருக்க அவனின் படத்தை நான் தேடி தேடி பார்த்துக் கொண்டிருந்தேன். அவனின் அழகில் மயங்கி அல்ல. அவனின் நடிப்பில், அவனின் திரைப்பட கதை தேர்வில், அவனின் குரலில், அவனினின் நகைச்சுவை உணர்வில் அனுஅனுவாக என்னை அவன் ரசிக்க வைத்தான்.
சட்டென மாறும் அவனின் உடல்மொழி எல்லா நடிகர்களிடமும் பார்க்க முடியாது. ரோபின்ஸ் வில்லியம்ஸ் போன்ற குறிப்பிட்ட சில நடிகர்களிடமே அந்தக் கலை குடிக்கொண்டிருக்கிறது. pursuit of happiness திரைப்படத்தில் என்னை பாதித்த சில காட்சிகளை இங்கு சொல்ல விரும்புகிறேன். ஒரு தந்தையாக தன் மகனிடம் அவர் கொண்டிருக்கும் தவிப்பும், தங்குவதற்காக ஒரு இடத்தை தேடி செல்வதும், பொருளாதார சூல்நிலையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் காட்சிகளும் ஒரு சராசரியான தமிழ் சினிமாவில் நான் பார்த்ததில்லை. அது உண்மை. தமிழ் சினிமாவில் சில சமயம் எடுக்கபடும் ஓவர் சீன்களில் என் வீட்டில் உள்ளவர்கள் கண்களில் கண்ணீர் வழிய பார்த்து உருகிய காட்சிகளில் இது எல்லாம் அதிகமாக தெரியவில்லையா என்று அவர்களின் கண்ணீருக்கு அர்த்தமில்லாமல் செய்துவிடுவேன். உண்மையில் இப்படி நடக்குமா? என்றே தொடங்கும் என் வசனங்கள். ஏன் தமிழ் சினிமாவில் எதார்த்த வாழ்வை படமாக்க மறுக்கிறார்கள் என்ற கேள்வியை பல நாள்களாக நான் கேட்டிருக்கிறேன். (இப்போது தமிழ் சினிமாவின் தரம் மாறியிருப்பதையும் ஒப்புக்கொள்கிறேன்)


தன்னை நிறுப்பிக்கப் போராடும் ஒரு தந்தையுன் உள்ளத்தை அதன் இயக்குனர் மட்டுமல்ல ஒளிபதிவாளரும் மிகத்துள்ளியமாக பதிவு செய்திருப்பார். ஆனால், அந்நபர் வேலை குறித்த அந்த பதிலையும் சொல்லாமல், டெக்சிக்கும் பணம் கொடுக்காமல் இறங்கி போய்விடுவார். பணம் இல்லாததால் டெக்சி ஓட்டுனரிடமிருந்து தப்பி ஓடும் காட்சியில் உண்மையில் நாமே ஓடிக்கொண்டிருப்போம். அந்த அளவுக்கு மனதை பாதிக்கும் காட்சிகளாக அவை அமைந்திருக்கும்.

தனிமையின் கொடூரம், நோயின் தீவிரம், மனித உளவியல் என காட்சிக்கு காட்சி வில் ஸ்மித்தின் நடிப்பை மட்டுமே மூலதனமாக வைத்து படமாக்கப்பட்டிப்பதை உணர முடியும். இந்த படத்தின் ஒரு காட்சி மட்டும் இன்றும் என் மனதை விட்டு அகலாத காட்சியாக இருக்கிறது. அந்தப் படத்தைப் பற்றி பேசும்போதெல்லால் இந்தக் காட்சி குறித்து ஒரு வரியாவது கூறிவிடுவேன்.

சுமார் 22 படங்களில் நடித்திருக்கும் வில் ஸ்மித், எல்லா படங்களும் முக்கியமான படங்கள் என்றும், அனைத்து படங்களும் எனக்கு பிடித்த படங்கள் என்றும் கூற மாட்டேன். ஆனால் Seven Pounds, Independence Day, போன்ற படங்கள் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு நீண்ட நாள்கள் ஆனது.
-யோகி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக