புதன், 8 அக்டோபர், 2014

வரைபவனின் மனைவி


நான் வரைபவனின் மனைவி
வரைபவனின் மனைவியை
வரைபவனின் மனைவி என்றே அழைக்கிறார்கள்

அதைத்தவிர வேறு அடையாளங்கள்
அவளுக்கு வழங்கப்படுவதில்லை
வரைபவனின் மனைவி
கவிதை வரைகிறாள்
நடனம் ஆடுகிறாள்
பாடல் இசைக்கிறாள்
உணவு சமைக்கிறாள்
புதிர் போடுகிறாள்
நூதனமான சில விஷயங்களை
அசாட்டையாகச் செய்கிறாள்

இருந்தபோதிலும்
வரைபவனின் மனைவியாகவே
அவள் அறியப்படுகிறாள்

தன் அடையாளத்தைக் குறித்து
அவள்
சில சமயம் அமைதிம் இழக்கிறாள்

வரைபவனின் தூரிகைகள்
பாம்பாய், புழுவாய், புல்லாய், மண்ணாய்ப்போக
கனவு காண்கிறாள்
வர்ணங்கள் வர்ணம் இழக்கச் சாபமிட்டுக்
வரைபவனிம் மனைவி
கனவை கரைக்கிறாள்

அடையாளம் என்ற ஒன்றுக்கு
அடையாளம் என்பதைத் தவிர
வேறென்ன இருக்கிறது
என்று குறிப்பு எழுதிவைத்து
உணர்ச்சியற்று நாட்களை நகர்த்துகிறாள்

நான் இன்னும் வரைபவனின்
மனைவியாகவே இருக்கிறேன்

-யோகி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக