புதன், 8 அக்டோபர், 2014

கதவுகளுடன் நான்

கதவுகளுடன் நான்


என்னிடம் பல கதவுகள் இருந்தன
ஏமாற்றும் கதவு
பொய் சொல்லும் கதவு
கோபம் காட்டும் கதவு
ஏசும் கதவு
காதலிக்கும் கதவு
சிரிக்கும் கதவு
அழும் கதவுகள் என
கதவுகள் வகைபடுத்தி இருந்தன

சந்தர்ப்பம் புரியாத வேளைகளில்
கதவுகள் என்னிடம்
அதன் சுயநலத்தை வெளிப்படுத்தும்

அபூர்வமாய்ச்
சில வேளைகளில் கதவுகள்
உண்மையுடனும் நடந்துக்கொள்ளும்
அதன் ஆதிக்கம் கணநேரத்தில்
என்னை கல்லறைவரை இட்டுச்சென்றது

சுதாகரித்த நான்
பாதாளக்குழியில் அத்தனை கதவையும் எரித்துவிட்டு திரும்பினேன்

என் வாசலில் எனக்குமுன் காத்திருந்தன  அத்தனை கதவுகளும்
என்னை பாதாளகுழிக்கு இட்டுச் செல்ல

-யோகி2 கருத்துகள்:

  1. தற்போது தங்களை ஆதரித்த அந்த நல்ல மனம் படைத்த கதவுகளுக்கு எனது நன்றி. காரணம், தங்களின் சேவைகள் இன்னும் பலருக்கு தேவை. ஆகையால், இறைவனின் அருள் வாசக்கதவுகள் என்றுமே தங்களுக்காக திறந்திருக்கும்.

    பதிலளிநீக்கு