சனி, 15 நவம்பர், 2014

இருக்கலாம்


இறுதி சந்திப்பில்
யாருக்காவது
பேசுவதற்குச் சுவாரஸ்யமான
சம்பவம் இருக்கலாம்
சொல்லத் தவிக்கும் ஆதங்கங்கள்
தண்ணீரற்ற மீனின் துடிதுடிப்பாய்
கண்ணியில் மாட்டிக்கொண்ட
பறவையின் படபடப்பாய்
அகால மரணமடைந்த
காதலின் துயரமாய்
அந்த சந்திப்பு அமையலாம்
உயிரை உறிஞ்சும் ஆழ்முத்தத்தில்
ஒரு சொட்டு கண்ணீரில்
இதழ் விரியாத சிரிப்பில்
ஒரு கை அசைவிலும்
அந்த சந்திப்பு முடியலாம்
அல்லது
அங்கிருந்தும் தொடங்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக