புதன், 5 நவம்பர், 2014

கனவுகள் கலைத்த சொற்கள்ஒரு கவிதைக்காக
பல மாதமாக 
முயற்சித்து வருகிறேன்
திடீரென
ஒரு கவிதை நடுநிசியில்
உதிக்க
அதன் வரிகளை
என் போர்வையின்
அடியில்
எழுதி வைத்தேன்
காலையில்
போர்வையில் தேடினால்
கவிதை வரிகள்
கட்டிலில் சிதறிக் கிடந்தன
கனவுகள் 
சொற்களை 
கலைத்துப் போட்டிருக்கலாம்
வரிகளை அடுக்கி 
கவிதையைத் தேடலானேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக