ஞாயிறு, 4 மார்ச், 2018

"பெயரிடாத நட்சத்திரங்கள்" - யோகி

 நரகாசுரர்கள் அல்ல.  விழா எடுத்து கொண்டாடுவதற்கு...
 
 
 

"பெயரிடாத நட்சத்திரங்கள்" புத்தக வெளியீடு ஈப்போ நகரில் கடந்தசனிக்கிழமை  3/3/2018 அன்று மழையின் துணையோடு இனிதே நிகழ்ந்தேறியது
கனத்த மழையும் இந்த வெளியீட்டைக் காண வந்திருந்ததுஎன் வரையில் ஈழம்சார்ந்த எந்த நிகழ்ச்சியை முன்னெடுத்தாலும் அங்கு மழையும் 
ந்துவிடுகிறது.   மழையைப் பொருட்படுத்தாது சில தோழர்கள் உவப்போடும், உணர்வோடும் வருகையளித்து சந்திப்பில் கலந்து கொண்டார்கள். கிட்டத்தட்ட 12 பேர் இருந்தோம். உரையாடல் நிகழ்த்துவதற்கு ஏற்றவாறு கதிரைகளை வட்டவடிவில் அமைத்துக் கொண்டோம். நேரத்தைக் கடத்தாது நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார் தோழர் சிவாலெனின்.


தொடக்கமாகமுன்னாள்  போலீஸ்அதிகாரியான  தோழர் ருத்ராபதி புத்தகம் தொடர்பான தன் வாசிப்பு  அனுபவத்தினோடுபோர் நடந்த பிற நாடுகளில் தனக்கு ஏற்பட்ட  அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்குறிப்பாக போஸ்னியா நாட்டில் மத- இன வேறுபாட்டினால் ஏற்பட்ட போரில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட  உடல்களை  தோண்டியெடுத்த அனுபவத்தைப் பகிர்ந்தபோது அவ்விடமெங்கும் அமைதியே நிலவியது.
தொடர்ந்து இந்த சந்திப்பின் ஏற்பாட்டாளர் என்ற ரீதியில் ”பெயரிடாத நட்சத்திரங்கள் ” புத்தக வெளியீட்டை  ஏன் மலேசியாவில் நிகழ்த்த வேண்டும் மற்றும் இந்த புத்தகத்தின் உள்ளடக்கத்தில் பேசப்பட்டிருக்கும் விஷயம் என்ன என்று விளக்கும் கடப்பாடு எனக்கு நிறையவே இருந்தது.

மலேசியாவைப் பொறுத்தவரை தமிழ்ப்பள்ளிகோயில்சினிமா மற்றும்  இன  டிப்படையிலான சில விஷயங்களுக்கு பெரிய அளவில் ஆர்வம் காட்டுவார்கள். ஜல்லிக்ட்டைப் பார்த்திடாத எம் மலேசியா சமூகம் இங்கு ருந்தபடியே அதற்கும் ஆதரவுஅளித்ததுஆனால்ஏன்   போர் சம்பந்தப்பட்ட  உணர்வுப்பூர்வமான விஷயங்களை மட்டும் அரசியாக்குகிறது? ஈழப்பிரச்சனையை வைத்து மலிவான விளம்பரம் தேடுபவர்கள், மலேசியாவில் தஞ்சமடைந்த  ஈழ அகதிகளுக்கு என்ன செய்தார்கள்?  வாடகை கட்ட முடியாமல் கைச்செலவுக்கு பணமில்லாமல்அவர்கள்  தவித்துக்கொண்டிருந்த தருணத்தில்ஈழத்தில்இருப்பவர்களுக்காக இங்கே உணர்ச்சிப்பூர்வமான கோஷம் எழுப்பிகொண்டித்தவர்கள் அதிகம். முகநூலில் புலிகள் தலைவரின் படத்தை வைத்துக்கொள்பவர்களும்,  பதிவு இட்டுக்கொள்பவர்களும் மேடைபோட்டு  ஈழ  ஆதரவாளர்கள் எனப்பேசுபவர்களும் விளம்பரத்தை தூக்கிப் போட்டுவிட்டு செயல்பட வாருங்கள் என்றால்  காணாமல்  போய்விடுவார்கள். அதையும் தாண்டி உயிர்ப்புடன் செயற்படும் தோழர்களுக்கு இவ்வேளையும் என் மரியாதை கலந்த நன்றியினை கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.


இதோ  ஈழப்பெண் போராளிகள்எழுதியிருக்கும் இந்தக் கவிதைகள் என்வரையில் கவிதைகள் அல்லஅவை மரண வாக்குமூலங்கள்இந்த மரண வாக்கமூலத்திற்கு என்ன விலைகொடுக்க முடியும்மரண வாக்கு மூலங்கள்  போரை மட்டும்பேசிடவில்லைபுலம்பெயர்ந்து  வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு ஊருக்கு பணம்அனுப்பிக்கொண்டிருக்கும் தன் உடன்பிறப்புகளையும் பேசுகிறதுநம்மில் நிறைய பேர் புலம்பெயர்ந்தவர்கள் வெளிநாடுகளில் சொகுசான வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பதாகப் பேசுகிறோம்அல்லது நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் புலம்பெயர்ந்தவர்கள் அவர்களின் வாழ்க்கையை வாழத்தொடங்கி விட்டார்களா என்றுகூட உறுதியாக தெரியவில்லை எனக்கு. போராளி பெண்கள் அதையும்கவிதையாக நமக்கு வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். வாசித்துப்பாருங்கள் அவர்களின் கவிதைகளை.

அதில் ஒரு கவிதை இப்படி பேசுகிறது.

எழுதுங்களேன் !
நான் எழுதாது செல்லும் என் கவிதையை
எழுதுங்களேன் ...

ஏராளம் எண்ணங்கள் எழுத
எழுந்துவர முடியவில்லை...
எல்லையில் என்
துப்பாக்கி எழுந்து நிற்பதால்
எழுந்து வர என்னால் முடியவில்லை
எனவே
எழுதாத
என் கவிதை
எழுதுங்களேன்

சீறும் துப்பாக்கியின் பின்னால்
என் உடல்
சின்னாபின்னப்பட்டுப் போகலாம்
ஆனால் என் உணர்வுகள் சிதையாது
உங்களைச் சிந்திக்க வைக்கும் அது
அப்போது எழுதாத
என் கவிதையை
எழுதுங்களேன்...
(பக்கம் 64)
 கேப்டன் வானதி 1991- ஆம் ஆண்டு எழுதிய இறுதி கவிதை இது. போராளியான அவர் ஆனையிறவு போரின்போதுஎழுதிய கவிதை. யாராவது எனக்கு சொல்லுங்கள்.. யாரால் அவரது கவிதையை எழுதிட முடியும்?  எழுத வேண்டாம்?எழுத நினைக்கவாவது முடியுமா? ”அர்த்தமுள்ள என் மரணத்தின் பின் என்ற வார்த்தையில் பொதிந்திருக்கும்நம்பிக்கைக்கு  என்ன பதில் சொல்லமுடியுமாஆனாலும் இந்த கவிதைக்கு பதில் சொல்லியிருக்கிறார்கள் என்றால்நம்ப முடிகிறதா?? அதுவும் இந்த புத்தகத்திலேயே அது இருக்கிறது. கிட்டத்தட்ட10 ஆண்டுகள் கழித்து கேப்டன் வானதியுடன் இருந்த நாதினி எழுதுகிறார். கவிதை இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது…

எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன் எனும்
உன் கவிதை எழுதப்பட்டுவிட்டது.
உன் துப்பாக்கி முனையை விட
உனது பேனா கூர்மையானதால்,
எழுதாது போன உன் கவியை
எழுதுவதற்காக இவர்
உயிரைக் கோலாக்கி
உதிரத்தை மையாக்கினர்.
எழுதாத உன் கவிதையை எழுதிவிட்டு
எம் செல்வக் குழந்தைகள்
உன்னிடமே வந்துவிட்டனர்.
களத்தில் நின்ற பெண் போராளிகள் பதிவு செய்திருக்கும் இந்த கவிதைகள் என்றென்றைக்குமாக பேசிக்கொண்டேதான் இருக்கப்போகிறது. நம் காதை  பொத்திக்கொள்ள முடியாது. 2011- ஆம் ஆண்டு தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட இந்தக் கவிதைத்தொகுப்பு கடந்தாண்டு மறுபதிப்பு கண்டு பம்பாயில் வெளியிடப்பட்ட்து.அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்கு தோழர்கள் முயற்சியெடுத்து வருகின்றனர். அதன் தொடக்கமாக இன்று இந்த கலந்துரையாடலும் புத்தக வெளியீடும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் மூன்றாவது அங்கமாக கலந்துரையாடலில் பங்கெடுக்க வந்தவர்கள் சில கேள்விகளை முன்வைத்தனர். இந்த சந்திப்பை 
ஏற்பாடு  செய்தவர்  மற்றும் போருக்குப் பிறகு 
ஒருமுறை ஊடறு நடத்திய பெண்கள்   சந்திப்பை முன்னிட்டு இலங்கை 
யாழ்ப்பாணத்திற்குச் சென்று  வந்த அனுபவத்தின் அடிப்படையில் அவர்களுக்கு பதிலளிக்கும் கடப்பாடு எனக்கு இருப்பதாக நினைக்கிறன். கேள்விக்கு என் பதில்கள் திருப்தியை தந்ததா  எனத் தெரியவில்லை.என் மனசாட்சிக்கு உட்பட்டு நேர்மையாகவே பதில் அளித்தேன் என நான் நம்புகிறேன்.
கேள்வி : புத்தக வெளியீடு செய்வதின் வழி ஒருவரின் வாழ்க்கையை எப்படி மேம்படுத்த போகிறீர்கள்?
பதில்: கிடைப்பது கொஞ்சம் பணமாகஇருந்தாலும் அதை எப்படிப் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என்பதை யாழ்ப்பாண மக்களுக்கு போர்சொல்லிக் கொடுத்திருக்கிறது. பலபோராளிகளுக்கு பகிர்ந்தளிப்பதைக் காட்டிலும் ஒரு வெளியீட்டில் கிடைக்கும்
பணத்தை ஓரிரு போராளிகளுக்கு பகிர்ந்தளிப்பதலின் வழி கொஞ்சம்கொஞ்சமாக மாற்றத்தை ஏற்படுத்தமுடியும்.  இன்று நாம் தொடங்கும் இந்தமுயற்சி நாளை ஒரு பெரிய மாற்றத்திற்கு வழி வகுக்கும் என நம்புவோம்.

கேள்வி : போர் முடிந்துவிட்டசூழலில்,  இலங்கையிலிருந்து வரும் மக்களை சந்திப்பதற்கான வாய்ப்பும்உங்களுக்கு கிடைக்கிறது.                                    பதட்ட நிலையிலிருந்து அவர்கள் வெளியில் வந்துவிட்டார்களா?
பதில் : அவர்கள் பதட்ட நிலையில் தான்இருக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும்
வேண்டாம்போர் 2009-ஆம்ஆண்டு நிறைவுக்கு வந்ததுநான் இலங்கைக்கு 
 2015-ஆம் ண்டுபெண்கள் சந்திப்பில் கலந்துகொண்ட தோழிகளோடு யாழ்ப்பாணம்  சென்றிருந்தேன்போரின் எச்சம் அப்போதும்
 மிச்சமிருந்ததுசில இடங்களில்    கண்ணிவெடிகள் அகற்றப்படாமல் இருந்தது.  மூன்றாவதுகண் ஒன்று  கூர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பதுபோன்ற பிரம்மை நம்மையும் தொற்றிக்கொண்டிருந்தது.தாயகத்திலிருந்தவர்களின் நிலையைச் சொல்லவே தேவையில்லை. கடந்தாண்டு நடந்த பெண்கள்சந்திப்பில் கலந்துரையாடுகையில்அந்தப் பதட்டம் இன்னும் நீடித்துக்கொண்டிருப்பது புலனாகியது.
உண்மையில் அவர்களை பதட்டநிலையில் வைத்திருப்பதற்கானகாரணத்தை    ஆராய்ந்தால் நாமும் ஒருகாரணமாக இருப்பது றைக்கும்சொந்த பூமியிலேயே வாழ்கிறோம்அல்லது செத்து மடிகிறோம் என இறுதிவரை போரை பார்த்த மக்கள் அவர்கள்னி ஒரு போரை சந்திக்கும் வலுஇல்லை அவர்களிடம்இதைப் பேசுவதற்கான வார்த்தைகள் கூடஇல்லைமாவீரர் தினம் கொண்டாடக்கூட அச்சப்படும் சூழலில் , வெளிநாட்டில் இருந்துகொண்டு,                  தலைவர் வருவார்தமிழ்ஈழம் மலரும்உரிமையை இழக்க மாட்டோம்என்கிற  நாம் போடுகிற கோஷங்கள் நம்அரிப்புக்கும் அரசியலுக்கும்  ல்லாஇருக்குமே      தவிரஎளிய  ஈழத்துமக்களுக்கு  இல்லை என்பதை நாம்முதலில் உணர                வேண்டும்.
கேள்விஅப்படி என்றால் தமிழீழம்என்பது  கனவுதானா ?
பதில்தமிழீழம் மலர வேண்டும் என்பதுதான் எனது ஆசையும். அதைவிடவும் 'மீண்டும் ஒரு போர்வேண்டாம்என்பதே தமிழீழ மக்களின் பிரார்த்தனையாக இருக்கிறது. இங்கேஒரு நிகழ்வை பதிவு செய்யநினைக்கிறன். பம்பாயில் நடந்த புத்தகவெளியீட்டில்,லண்டனில்புலம்பெயர்ந்து வாழும் தோழி ஆனந்தி பேசுகையில் ஒரு விஷயத்தைமுன்வைத்தார். அதாவது உங்கள்சகோதரன்உங்கள் நாட்டு மண்ணின்மைந்தன் தெருவில் இருக்கிறான். அவனை விட்டுவிட்டு நீங்கள்எங்களுக்காகப் பேசுகிறீர்கள். அவர்களையும் காப்பாற்றுங்கள் என்று. அது நம் நாட்டுக்கும் பொருந்தும் ஒருவசனம் தான்.

கேள்வி: அண்மையில் இங்கு கொண்டாடப்பட்ட மாவீரர் விழாவை விமர்சித்து எழுதியிருந்திங்க? எத்தனையோ போராட்டங்கள் இன்று அனுசரிக்கும் முகமாக கொண்டாட்டங்களாக செய்யப்படுகிறது. மக்களும் அதைக் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கின்றனர். மாவீரர் தினத்தையும் ஏன் அப்படி எடுத்துக்கொள்ளக் கூடாது?

முதலில் இந்தக் கேள்வியை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு நான் தள்ளப்பட்டுள்ளது என் துர்ப்பாக்கியமாக நினைக்கிறேன். எனக்கு விளங்கவில்லை, ஓர் இனத்தின் அழிவைக் கொண்டாட முடியுமா? ஈழப்பிரச்சினைக்கு குரல்கொடுத்த அளவுக்கு அல்லது ஆதரவு நல்கிய அளவுக்கு காஷ்மீர், சிரியா மற்றும் ரொஹின்யா மக்கள் பிரச்சனைகளை அணுகினோமா? தமிழினம் என்பதனாலேயே உலக நாடுகளில் இருக்கும்  தமிழர்கள் எல்லாம் ஒன்றிணைந்து குரல்கொடுத்தோம். நடத்தப்பட்ட போர் ஓர் இன விடுதலைக்காக நடந்தது. மரணித்த உயிர்களுக்கும் இன்றுவரை நீதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் அவர்கள் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு வருகிறது. இறந்தவர்களின்  அடையாளங்கள் கூட அழிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நரகாசுரர்கள் அல்ல.  விழா எடுத்து தீபாவளி கொண்டாடுவதற்கு.
கேள்வி:இந்தப் புத்தக வெளியீட்டில் கிடைக்கும் பணத்தை எப்படி ரு  போராளியின் வாழ்க்கையில் கொண்டு சேர்க்கிறீர்கள்காரணம் மக்களுக்குஉதவலாம் என்று போகும்போது அதை உரியவரிடம் சேர்க்க முடியாத சூழல்தான் ஏற்படுகிறது. இந்நிலையில்இதை எப்படி சாத்தியப்படுத்துவீர்கள்?
பதில்இந்தப் பொறுப்பினை ஊடறு ரஞ்சியும் அவர் தம் குழுவினரும் ஏற்று நடத்துகிறார்கள்அவர்கள் தொடர்ந்து இந்தக் களப்பணியை செய்து வருகிறார்கள்எனவேஇதுகுறித்த எந்த ஐயப்பாடும் வேண்டாம்மேலும்உதவி
உரியவரிடம் சமர்பிக்கப்பட்ட விவரங்கள் பொதுவில் பின்னர் பகிரப்படும்
இந்தக் கலந்துரையாடலுக்குப் பிறகுபுத்தகம் வெளியிடப்பட்டது.                                நிகழ்விற்கு  ந்திருந்தவர்கள் அவர்களால் இயன்றபணத்தைக் கொடுத்து புத்தகத்தைப் பெற்றுக்கொண்டனர். இந்தவெளியீட்டின் வழி 1,400 மலேசிய ரிங்கிட்திரட்டப்பட்டது. விரைவில் அந்தப்பணம் திரட்டப்பட்டதற்கான நோக்கத்தைச்  சென்றடையும். 

 

நன்றிகள்:
எனக்கு இந்த வாய்ப்பை நல்கிய ஊடறு றஞ்சி
நிகழ்ச்சியின் பதாகையை வடிவமைத்து பிரிண்ட் செய்து கொடுத்த ஓவியர் சந்துரு
நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர்களுக்காக தேனீர் –பலகாரம் ஏற்பாடு செய்து கொடுத்த தோழர் சிவா லெனின்.
சந்திப்புக்கான இடத்தை ஏற்பாடு செய்த தோழர் ருத்ராபதி
மற்றும் ஈப்போ மக்கள்.(குறிப்புநான் பெற்ற  50 புத்தகங்களில்இன்னும் 13 புத்தகங்கள் மிச்சம் உள்ள இவ்வேளையில் மேலும் ஒருகலந்துரையாடலை செய்வதற்குகிள்ளான் ட்டா நண்பர்கள் இணக்கம்தெரிவித்துள்ளனர்விரைவில்அதுகுறித்த விவரங்கள் பகிரப்படும். )


1 கருத்து: