Tagbanwa அல்லது Tagbanua என்ற பழங்குடி மக்களைக் குறித்து வாசிக்க நேர்ந்தது. 'Memory Of Dances' என்ற அந்தப் புத்தகம் அவர்களின் வாழ்வியல் முறையையும் வரலாற்றையும் புகைப்படங்களுடன் விரிவாகப் பேசுகிறது.
பிலிப்பைன்ஸ் மற்றும் புருணை நாட்டுடன் அதிகம் தொடர்புடைய இவர்களின் வரலாறு 1521-ஆம் ஆண்டுத் தொடங்குகிறது. இரு நாடுகளின் சாரத்தைத் துறந்து தன்னக்கென்ன தனி அடையாளத்தை இந்த இனத்தவர்கள் புனைந்துகொண்டுள்ளனர்.
ஆவி உலகச் சடங்குகளை இவர்கள் மேற்கொள்கின்றனர். மேலும், கொண்டாட்டங்கள்- நடனங்கள் எனும் அடிப்படையில் தங்களின் வாழ்கையைக் கொண்டாடுகின்றனர். ஜவரியிலிருந்து- ஜூன் வரை அவர்களின் கொண்டாட்ட காலக்கட்டம். அவர்கள் பாடும் போது சில்லரை நாணயங்களின் ஒலி எழும்புகிறது என ஊடகவியளாலர் மே சொல்கிறார்.

ஒரு சின்னத் தீவில் ஆண்-பெண் என்ற பாகுப்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. சுமார் 40 ஆயிரம் பேர்கள் அந்தத் தீவில் வசிக்கிறார்கள். ஆண்-பெண் இருவரும் வேட்டைக்குப் போகிறார்கள். விவசாயம் செய்பவர்களாக இருந்தாலும் கடல் வழி வாழ்க்கைத்தான் அவர்களுக்குப் பிரதானமாக இருக்கிறது. தேனும் எடுக்கிறார்கள். ஆண்-பெண் இருபாலருக்கும் மேலாடை அவர்களின் தேவை பொறுத்துதான்.
இயற்கையோடு சேர்ந்து வாழும் இவர்களுக்குத் தேவைக்கு அதிகமாக ஆசை இருப்பதில்லை. இறந்தவர்களின் ஆத்மா மீது அதிகம் நம்பிக்கை கொண்டிருப்பதால்

எனக்கு வியட்நாம் மற்றும் கம்போடியா போகத்தான் ஆசையிருந்தது. இப்போ பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒரு தீவில் வசிக்கும் இந்த Tagbanwa மக்கள் மீது ஓர் ஆர்வம் பிறந்திருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக