சனி, 2 ஜூலை, 2016

இரவை தின்பவள்

என்னை அழைத்து அழைத்து
மறைந்துக்கொண்டு பரிகாசம்
செய்கிறாய்...
உன் எல்லா அழைப்புகளையும்
சேகரித்து
தலையணையாக
செய்துவைத்திருக்கிறேன்..
இரவை
தின்பவளுக்கு
வரையரைகள்
இருப்பதில்லை..
தலையணை முழுதும்
குருதியின்
வாடையாக
இருக்கிறது
ஏதும்
யூகிக்கிறீர்களா தோழர்களே?
இரவு
அமானுஷியங்களால்
ஆனது
அறிவீர்கள் தானே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக