திங்கள், 13 ஜூன், 2016

அத்தேனீ

என் கவிதை தொகுப்பிற்குள் நுழைந்த தேனீ ஒன்றுஅதன் வனத்தை தேடி
40 வது பக்கத்தில்
கண்டடைந்தது...

25 வது பக்கத்தில்
பெண் தேனீ ஒன்று
அதன் வருகைக்காக
காத்திருந்தது
தேனி கவனிக்கவில்லை
இரண்டு தேனீக்களும்
தன் கூட்டை
என் புத்தகத்திற்கு வெளியே
விட்டுவிட்டு
அப்படி என்னதான் - என்
தொகுப்பிற்குள் தேடுகின்றன
என யோசித்துக்கொண்டே இருக்கிறேன்
யோகிகள் சிலர்
தேன்கூட்டை பிரித்துக்கொண்டிருந்தனர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக