
அவளின் முதற்கனவு
கருவுற்று
வனங்களை ஈனத் தொடங்கியது
மாயாவின் வனக் குழந்தைகள்
சாம்பல் மழை தூவப்பட்ட
விதைகளில் அடைந்து
காமம் வளர்க்க தொடங்கினர்
வரிவரியாய்
விழுந்த சூரியக் கதிர்கள்
வனத்தில் பச்சை மணம் பரப்பி
மரங்களும் வனஉயிர்களும்
ஆலிங்கனம் செய்துகொண்டன
காமம் எழுப்பும் ரூபங்களை
மாயா கனவுகளில் கண்டுகளித்தாள்
அந்தரங்கமாகும் சூன்யத்தில்
வெயிலின் உக்கிரம்
மாயாவின் குழந்தைகளின்மேல்
விழுந்து கொண்டிருந்தது....
-யோகி
நன்றி 'தை' கவிதை இதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக