செவ்வாய், 14 ஜூன், 2016

அவன் 3

நிகழ்ந்திடாத கலவியை நினைத்து
அவன் தினம் தினம்
என்னிடம் கேள்விகளை  
எழுப்பிய வண்ணம் இருக்கிறான்
எதுவும் அறியாதவளாய்
கையில் தண்ணீரை அள்ளி அதில்
நட்சத்திரங்களை சிறை வைத்து கொண்டிருக்கிறேன்
கையிலிருந்து நீர் சொட்டும்போது
ஒவ்வொரு நட்சத்திரமாக சிதறி
அவனுடைய கேள்விகளாக 
முளைத்த வண்ணம் இருக்கின்றன
அதோ அவன் குறி விரைத்து
நெருங்கி வருகிறான்
ரத்த நெடி வீச தொடங்குகிறது
அவனின் கேள்விகள்  அவன் அறிய 
மெல்ல அறுத்தெடுத்தேன் அவன் ஆண் குறியை
விறைப்பு அடங்குவதற்குள் 
தீபம் ஏற்றி வைத்தேன்
என்னில் இருந்து வெளியேறியது
அத்தனை காலம் சேர்த்து வைத்திருந்த
மூச்சுக்காற்று

நன்றி படிகம் கவிதை இதழ் (ஜூன் 2016)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக