திங்கள், 13 ஜூன், 2016

அவன் 1

பேருந்து நிறுத்தத்தில்
தினமும் எனக்காகக்
காத்திருக்கும் அவன்
என் வயதை அறிய வாய்ப்பில்லை

குடைவிரித்திரிக்கும் மாமரம்
அவனுக்காக என்மீது
காமப்பூவை உதிர்க்கையில்
யாருக்கும் எங்களின் அந்தரங்கள் தெரிந்திருக்கவில்லை

நான் தவறவிட்ட சாலையில்
நான் தவறவிட்ட பேருந்தில்
நான் தவறவிட்ட நேரத்தில்
நான் தவறவிட்ட வயதில்
நான் தவறவிட்ட காலத்தில்
என்னைத் தவறவிட்ட அவன்
நான் தவறவிட்ட எல்லாமுமாக
காத்துக்கொண்டிருக்கிறான்

பேருந்தின் காலாவதியான
அனுமதிச் சீட்டுக்குப் பின்னால்
அந்தரங்கக் குறிப்புகளை
எழுதியபடி...

-யோகிகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக