சனி, 16 ஜனவரி, 2021

நாங்கள் வரலாறு படைத்தோம் (we were making history)

தலைப்பு: நாங்கள் வரலாறு படைத்தோம் (we were making history) 
தமிழில் : பேரா.ஆர் சந்திரா வெளியீடு: பாரதி புத்தகாலயம்
48 பக்கங்கள் கொண்ட கையேடு மாதிரியான இந்தப் புத்தகம் ‘வீரம் செறிந்த தெலுங்கானாப் போராட்டத்தில் பங்கேற்ற பெண் வீராங்களைகளின் பங்கை எடுத்துக்கூறும் வாய்மொழி வரலாறு’ என்று அடிக்கோடிட்டு  அறிவித்துவிட்டு பேச தொடங்குகிறது. 

இந்தப் புத்தகத்தில் பேசியிருக்கும் பெண்கள் மேட்டுக்குடி வீராங்கனைகள் அல்ல. இந்தியாவில் விவசாயிகள் போராட்டங்களில் முக்கியமாக இடம் பிடித்திருக்கும் தெலுங்கானா விவசாய சமூகத்தைச் சேர்ந்த கடைநிலைப் பெண்கள். நிஜாம்களும், தேஷ்முக் குகளும், தேசாய்களும் இவர்களுக்கு செய்த கொடுமைகளை பார்க்கும்போது மண்டையில் சூடு ஏறுகிறது. நில பிரபுகளிடம் கூலி கேட்காமல் கட்டாய உழைப்பை வரியாக செலுத்தியிருக்கிறார்கள் சலவை தொழிலாளிகளும், முடி வெட்டுபவரும், மரவேலை செய்பவர்கள் உட்பட தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பலரும். இதில் பெண்களின் நிலை படுபயங்கரமாக இருக்கிறது. நல்ல துணி உடுத்திக்கொள்ளக் கூடாது. தலையில் பூ வைத்துக்கொள்ளக்கூடாது, சாப்பிட்டுக்கொண்டிருந்தால் கூட ‘துரை’ அல்லது துரைசாணி அழைத்தால், சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஓட வேண்டும். நிலப்பிரபுவின் நிலத்தில் வேலை செய்யும்போது குழந்தைக்கு பாலூட்டக்கூட விட மாட்டார்கள். இந்தப் பெண்கள் மீது நிலப்பிரபுக்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. நிலப்பிரபுகளின் பாலியல் தாக்குதல்களுக்கு ஆளாகிய விவசாயப் பெண்கள் பட்ட துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. 

 1916-லிருந்து மகளிர் அமைப்புகளை அமைத்து, ஒடுக்குமுறையை எதிர்த்து செயல்பட தொடங்கியிருக்கின்றனர் பெண்கள். குறிப்பாக கல்வி, விபச்சார ஒழிப்பு, பர்தா முறை ஒழிப்பு, விதவை மறுமணம் உள்ளிட்ட விஷயங்களை விவாதித்திருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக 1936 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மாதர் சங்கம் விவசாயப் பெண்களை திரட்டும் பணியை செய்திருக்கிறது. இந்தப் புத்தகத்தில் 16 விவசாயப் பெண்கள் தங்கள் அனுபவத்தை வெளிப்படையாக வைக்கின்றனர். 



 தெலகா இனத்தைச் சேர்ந்த கமலம்மா என்பவரின் கொள்ளுப்பாட்டி, பாட்டி, தாய் உள்ளிட்டவர்கள் தல்லதலைமுறையாக ஜமிந்தார் குடும்பத்தில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்திருக்கின்றனர். இந்தப் பெண்களுக்கு திருமணம் என்ற ஒன்று நடக்காது. தவிர கமலம்மாவின் கொள்ளுப்பாட்டி ஒரு பிராமண குடும்பத்திற்கு ஒரு படி அரிசி மற்றும் ஒத்த ரூபாய்க்காக விற்கப்பட்டிருக்கிறாள். அந்த நிலப்பிரபு வீட்டிலிருக்கும் ஆண்களுக்கு அவள் பாலியல் சேவையையும் செய்ய வேண்டும். நிலப்பிரபுகளின் வீடுகளில் அடிமையாக போகும் பெண்கள் திருமணமாகாதவர்களாகவும் கன்னிகழியாதவர்களாகவும் இருக்க வேண்டும். அதனாலேயே குழந்தைகள் திருமணம் அதிகம் நடந்திருக்கிறது. இதுபோக துரை மார்களின் அட்டகாசமும் அதிகமாக இருந்திருக்கிறது. துரைமார்களின் இச்சைக்கு பலியாவதென்பது சர்வ சாதாரணம் எங்கிறார் கமலம்மா. அதை பெண்கள் வெளியில் சொல்லக்கூடாதாம் ; துரையை எதிர்த்தால் வாழ்க்கையே நரகம் ஆகும் என்கிறார். அப்படி வெளியில் சொன்னதற்காக கூட்டு பலாத்காரத்திற்கு அந்தப் பெண் ஆளானதை நினைவு கூறுகிறார் கமலம்மா. 

கமலம்மாவின் தந்தை கொஞ்சம் முற்போக்கானவர் என்று சொல்கிறார்கள். தன் மனைவியை திருமணம் செய்யாவிட்டாலும், தன் பிள்ளைகளை கவனமாக வளர்த்திருக்கிறார். படிக்க வைத்திருக்கிறார். நிலபிரபுகளிடமிருந்து காப்பாற்ற 8 வயதிலேயே திருமணம் செய்துவைத்திருக்கிறார். கால ஓட்டத்தில் தெலுங்கானா போராட்டத்தை கேள்விபட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து ஆயுதம் ஏந்தி போராடியிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் காட்டில் தன் சொந்த குழந்தையை விட்டுவிடக்கூட துணிந்திருக்கிறார். பின் தோழர் ஒருவரின் மூலம், குழந்தை இல்லாத ஒருவருக்கு தன் குழந்தை கொடுத்துவிடலாம் என்று கேட்கவும் கொடுத்துவிட்டு இன்றுவரை அந்தக் குழந்தை குறித்த தகவலை அவரால் அறியவே முடியவில்லை. 

தயானி பிரியம்வதா என்ற போராளி கட்சியில் மிக முக்கிய பொறுப்பினையாற்றியிருக்கிறார். பெண்களுக்கு கல்வி, தற்காப்பு போன்றவற்றை சொல்லிகொடுத்திருக்கிறார். கட்சியோடு விவாதிப்பார். விவசாயிகள் அதிககூலி கேட்கவேண்டும், குழந்தைகளுக்கு பாலூட்டும் பெண்கள் வேலையின்போது சில மணிநேரம் ஓய்வு எடுத்துக்கொள்வது அவர்களிம் உரிமை என்பதையும் விளக்குவார். கட்சியில் தீவிரமாக செயலாற்றியவர் சிறைவாசமும் அனுபவித்திருக்கிறார். மோசமான உணவு உள்ளிட்ட காரணங்களுக்காக அங்கும் போராட்டம் நடத்தியிருக்கிறார். 

தெலுங்கானா போராட்டம் முடிந்த பின்பு கட்சி பலபெண்களைம் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. அதில் பிரியம்வதாவும் ஒருவர். போராட்டத்திற்கு பிறகு கட்சியில் தீவிரமாக பணியாற்ற முடிந்திருந்தால் மனதிருப்தி இருந்திருக்கும் என்கிறார். வீட்டுக்கு அனுப்பப்பட்ட பெண்களை அவர்களை சுற்றியிருந்தவர்கள் தாழ்வாக பார்த்ததையும் வலியோடு பதிவு செய்திருக்கிறார் பிரியம்வதா. சலவைத்தொழிலாளியான அயிலம்மா என்பவரும் தெலுங்கான போராட்டத்தில் தனித்துவமானவர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது 9 ஏக்கர் நஞ்சை நிலத்தை பாதுகாக்க பெரும்பாடு பட்டு போராடியிருக்கிறார். பெரும் ஆதிக்கம் செலுத்திவந்த நிலப்பிரபுவை எதிர்த்து நீதிமன்றம் வழக்கு என அலைந்து 9 ஆண்டுகள் துணிவுடன் போராடியிருக்கிறார். 

அதுபோல சாலம்மா எனும் போராளியை சிங்கம் என்று சொல்கிறார்கள். ஒரு பெண் சமையல் வேலையைத்தான் செய்ய வேண்டுமா என்று கேட்கும் அவர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அதுதான் முக்கியம் என்கிறார்.

கணவனும் மனைவியுமாக கம்யூனிச இயக்கத்தில் போராளியாக இருந்த லலிதம்மா தன் கணவர் சிறைக்கு சென்ற பிறகு மிகுந்த துன்பத்தை அனுபவித்திருக்கிறார். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த லலிதம்மா இயக்கத்தில் இருந்தது அவரின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. ஓர் உதாரணம் சொல்கிறார்; 14 வயதில் மகன் பிறந்தான். கணவர் சிறையில் இருந்தார். வேறு வழியின்றி அம்மாவின் வீட்டிற்குச் சென்றேன். நான் அங்கு போவதற்கு முன்பு, நான் சுத்தமாவதற்கு பிராயச்சித்தம் செய்ய சொன்னார்கள். தங்க கம்பியை பழுக்கக் காய்ச்சி நாக்கில் சூடு வைப்பார்கள். இதற்கு ‘உவுலா’ என்று பெயர். இதை செய்ய மறுத்தால் பெற்றோர் செத்துவிடுவதாக மிரட்டினார்கள். எனக்கு வேறு ஆதரவு இல்லாததால் ஒத்துக்கொண்டேன்” என்கிறார். 

 கம்யூனிஸ்களை திருமணம் செய்துக்கொண்டால் வாழ்க்கை சந்தோஷமாக அமையாது என்று எண்ணியவர்களுக்கு, இந்தப் போராளி பெண்கள் அப்படியல்ல என்று வாழ்ந்துக்காட்டியுள்ளனர். மகளிர் அமைப்புகளுக்கு அரசியலும், இடதுச்சாரி சிந்தனைக்கொண்ட புத்தகங்களும் பெண்கள் வாசிக்க வேண்டும் என்று மிக அழுத்தமாக கூறுகின்றனர். 

இந்தப் பெண்கள் பேசியிருப்பதில் இயக்கம் குறித்து நிலைப்பாட்டை இரண்டு விதமாக பார்க்க முடிகிறது. சில பெண்கள் எல்லா வேலைகளியும் பால்நிலை வேறுபாடு இன்றி செய்தோம் என்று சொல்கிறார்கள். அச்சமாம்பா என்பவர் கூறும்போது துணிவைப்பது சமைப்பது என்று நிறைய வேலைகள் இருக்கும் என்கிறார். தவீர ஆண் தோழர் ஒருவரோடு இணைத்து பேசப்பட்டதையும், பின் வேறு முகாமிற்கு மாற்றப்பட்டதையும் சொல்கிறார். செய்யாத தவறை செய்ததாக ஒப்புக்கொள்ள சொன்னதும் அதை மறுத்ததிற்காக கட்சி விட்டு நீக்கியதையும்கூட அச்சமாம்பா பதிவு செய்திருக்கிறார். 

தெலுங்கானா போராட்ட காலம் முடிந்ததும், பெண்களை கட்சியிலிருந்து விடுவித்து திரும்பவும் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். போராட்டத்தின் போதுவ் கையில் ஆயுதம் ஏந்தி உணவு வழங்குபவர்களாகவும், செய்திகளை தெரிவிப்பவர்களாகவும், ரகசியத்தொடர்புகளை பாதுகாப்பவர்களாகவும் இருந்திருக்கும் இந்தப் போராளிகள், இப்போது வீட்டில் தையல் மிஷின் முன்பு உட்கார வேண்டுமா? என்று கேட்டிருக்கிறார்கள். ஆண்-பெண் சமத்துவத்தை கட்சிக்கு யார் வகுப்பெடுப்பது? 

 -யோகி

திங்கள், 11 ஜனவரி, 2021

"நடுவோம் வாரீர்" பசுமை இயக்கம். #GrowWithCAP


2020 –ஆம் ஆண்டு நாம் எதிர்கொண்ட சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல. விவசாயத்தின் மகிமையை அதன் அவசியத்தை உணர்ந்த ஆண்டு என்றுகூட சொல்லலாம். கோவிட் தொற்று பரவிய காலத்தில், உணவு பொருட்களின் பற்றாக்குறை, காய்-கறிகளை வாங்க முடியாத சூழ்நிலை என்று பல விஷயங்கள் விவசாயத்தின் தேவையை நமக்கு உணர்த்தி இருக்கின்றன. இது ஒரு படிப்பனை. இந்தப் படிப்பனையை செயல்படுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகவும் இருக்கிறது. 
 அதற்காக பல தன்னார்வ அமைக்கள் களத்தில் இறங்கியுள்ளன. அதன் நீரோட்டத்தில் பினாங்கு பயனீட்டாளர் சங்கமும் இணைகிறது. இந்தியர்களான நாமும் அதில் இணைவது நாட்டிற்கு மட்டுமல்ல நமக்கும் நம் வருங்கால சந்ததியினருக்குமே கூட அவசியமாகும். பிறக்கப் போகும் 2021 ஆண்டின் முதல் தேதியில் நமது விரல்கள் பசுமையை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக, பினாங்கு பயனீட்டாளர் சங்கம் "நடுவோம் வாரீர்" என்ற இயக்கத்தைத் தொடங்கி உள்ளது. 

அனைத்து மலேசியரும் 1.1.21 வெள்ளிக்கிழமை அன்று ஏதாவது ஒரு காய்கறி, விதை, செடி, மரம் அல்லது பூக்கள் நட வேண்டும். வாழை, பப்பாளி, முருங்கை, மா, வெண்டை, கத்திரி, மிளகாய், கறிவேப்பிலை, புதினா, வல்லாரை, கற்பூரவல்லி, மஞ்சள் என உங்களுக்கு பிடித்த அல்லது தேவையான ஏதாவது ஒன்றை நீங்கள் நட வேண்டும். இதன் நோக்கம் உணவு தேவைக்கு மட்டுமல்ல. ஒரு விவசாயியின் அனுபவத்தை நாம் பெறுவதோடு, நாம் இந்தப் பூமித்தாயைக் காப்பாற்ற வேண்டும் என்ற உண்ணத நோக்கமும் அடங்கியுள்ளது. 

நமது மண், விவசாயத்திற்கு ஏற்ற வளமான செலுமையான மண். அதனால்தான் இதற்கு முன்னால் நமது நாடு ஒரு விவசாய நாடாக பெயர் பதிக்க முடிந்தது. வெற்றியின் பாதையில் முன்னோக்கிச் செல்ல இன்று தொழிற்துறை நாடாக நாம் உருமாறிவிட்டோம். ஆனால், உண்ணும் உணவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டிருப்பது வெற்றியை நோக்கிய பயணமா என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. பூக்கள் முதல் பழங்கள் காய்-கறிகள் என எல்லாமெ கிடுகிடுவென விலை உயர்ந்திருக்கும் இந்தச் சூழலுக்கு நாமும் ஒரு காரணமே. 


வாசலில் புல் மண்டிவிட்டால் அதை பிடுங்கி சீர் செய்ய சோம்பேரிப் பட்டுக்கொண்டு சிமண்ட் போட்டு மூடி மண்ணை பயனில்லாமல் செய்யும் ஆட்கள்தானே நாம். சம்பளப் பற்றாக்குறை, வேலை நிறுத்தம் போன்றவற்றால் கஷ்டப்படும்போது உணவுக்காகவும் கஷ்டப்படும் நிலையை எப்படி எதிர்கொள்வது? 

‘தூங்கி விழித்துப் பார்க்கும் போது நாம் அடிக்கடி பயன்படுத்தும் அல்லது வாங்கும் பொருளின் விலை 50 காசிலிருந்து ஒரு வெள்ளி வரையில் உயர்ந்திருக்கிறது. இனி ஒவ்வொரு நாளும் நமக்கு விலையேற்றம் தினமாகவே தொடங்கும்’’ என பயனீட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வு பிரிவு அதிகாரி என் வி. சுப்பாராவ். 

வானத்தில் வட்டமிடும் பருந்து, கீழே விளையாடி கொண்டிருக்கும் கோழிக் குஞ்சுகளைக் கொத்திச் சென்று விடுவது போல, இந்த விலை உயர்வும் ஒரு நாள், பயனீட்டாளர்களை ஒரு காலைப் பொழுதில் கொத்தி தூக்கிச் சென்று விடுமோ என்ற பயம் இப்பொழுது எழத் தொடங்கியிருக்கின்றது என சுப்பாராவ் உதாரணம் காட்டினார். பயனீட்டாளர்களிடையே ஒரு முழுமையான மாற்றம் ஏற்படாவிட்டால், மிகப்பெரிய நிதி பிரச்சினைகளை பயனீட்டாளர்கள் எதிர்நோக்க வரும் என் எச்சரிக்கு அவர், நமக்கு மிக அருமையான ஒரு திட்டத்தை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். 



நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். நீங்கள் தரைவீட்டில் உள்ளவர் என்றால் உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவது நிலத்தில் மரம், செடி கொடி என்று ஏதாவது நடலாம். நிலம் இல்லாதவர்கள் அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் உங்கள் வீட்டில் பயன்படுத்தாத பழைய பாத்திரமோ, குவைளையோ, உடைந்த வாளியோ ஏதாவது ஒரு பாத்திரத்தில் மண்ணை நிரப்பி, உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு செடியை நட வேண்டும். காய்கறி வகைகள் அல்லது பூக்கள் மூலிகைகளாக இருந்தால் கூடுதல் சிறப்பு. காரணம் அவை நம் தேவைக்கு உதவக்கூடும். குறிப்பாக புதினா, துளசி உள்ளிட்டவை மூலிகைகளாகும். நடப்பட்ட செடியை புகைப்படம் எடுத்து ‘பயிர் செய்வோம்! பசுமையை பாதுகாப்போம்!’ என்று குறிப்பிட்டு உங்கள் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து #GrowWithCAP  என்ற தளத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

உங்களின் இந்த நடவடிக்கை பசுமையைத் தோற்றுவிக்க உதவுவதோடு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் முன்னெடுத்திருக்கும் இந்த முயற்சியில் நாமும் பங்களிப்பு செய்திருப்பதற்கு ஒரு சான்றாகவும் அமையும். ஒரு சோதனையான காலக்கட்டதை கடந்திருக்கிறோம். ஆனால், அந்தக் காலக்கட்டம் இன்னும் முடியாமலே இருக்கிறது. பூச்சிகொல்லி மருந்து தெளித்த, அதிக உரம் பயன்படுத்திய அல்லது மரபனு மாற்றப்பட்ட உணவுகளுக்கு நம் உடலை பழக்கப்படுத்தி மிக எளிமையாக நோயை இலவசமாக வாங்கி அதற்கு உணவைத் தவிர மற்ற எல்லாவற்றையும் காரணம் சொல்கிறோம். ஒரு முறை ஒரே முறை நீங்க நட்டு வைக்கும், விஷம் தெளிக்காத கத்தரி அல்லது வெண்டைக்காயை சாப்பிட்டுப் பார்க்க இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ளுங்களேன். 2021-ஆம் ஆண்டு இயற்கைக்கு திரும்பும் இந்த முயற்சிக்கு வாருங்கள்! இப்பொழுதே நடவு செய்வோம்!

ஞாயிறு, 6 டிசம்பர், 2020

சாமானியர்கள்தான் விவசாயிகள், ஆனால் சாமானியர்கள் அல்ல !







இன்று உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துக்கொண்டிருக்கிறது இந்தியாவில் நடந்துக்கொண்டிருக்கும் 'செல்லோ டெல்லி' விவசாயப் போராட்டம். என் வரையில் அப்போரட்டத்தை மெய் சிலிர்க்க பார்த்துக்கொண்டிருக்கிறேன். இந்தக் கொரானா காலத்து அச்சத்தை தூக்கிப் போட்டுவிட்டு அவர்களோடு ஓர் ஆளாக குரல்கொடுக்க டெல்லிக்கு பறந்துப்போக முடியவில்லையே என்று என் மனம் ஏங்கி தவிக்கிறது.

 
மலேசியாவில் களப்பணிகளில் ஈடுபடும் ஒருவளாக, அங்கு நடந்துக்கொண்டிருக்கும் இந்தப் போராட்டம், ஒரு போராட்டத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகவும் கல்வி போதனையாகவும் பார்க்கிறேன். மலேசியாவிலும் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். விளைநிலங்கள் அழிக்கப்படுகின்றன. அவர்களின் குரல் நம் நாட்டிலேயே கேட்காத போது, நாடு கடந்து கேட்க வாய்ப்பே இல்லை. சாமனிய மக்கள் முன்னெடுக்கும் ஒரு போராட்டத்தின் திட்ட வரைவு எப்படி இருக்க வேண்டும் என்பதை செயலில் பஞ்சாப் விவசாயிகள் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் நான் கற்றுக்கொள்ளக்கூடிய படிப்பினை என்கிறேன். 

உணர்ச்சிவயப்பட்டு ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கும், விரைவாகவும் விரிவாகவும் சிந்தித்து செயலாற்றுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. முதலாவதாக முன்னெடுக்கும் போராட்டத்தின் நோக்கம் என்ன? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? என்னென்ன தடைகள் வரும்? அத்தடைகளை எப்படி எதிர்கொள்வது போன்ற அனைத்துமே மிக துரிதமாக விவசாயிகள் கையாண்டிருக்கிறார்கள். தமக்கான உணவையும் அவர்கள் சேர்த்தே கையோடு கொண்டு வந்தது மட்டுமல்லாமல் தம்மை வழிகளில் டெல்லிக்கு போக விடாமல் தடுக்கும் காவல்படைக்கும் சேர்த்தே உணவு பரிமாறுகிறார்கள். உணவின் தேவை மற்றும் அதன் பயிறிடுதல் சிரமம் குறித்து ஒரு விவசாயியைத் தவிர வேறு யார் சரியாக புரிந்துக்கொள்ள முடியும்? 

பசிக்காக மட்டும் உணவு தேடுபவர்கள் நாம். நமக்கான உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நாம் கொடுக்கும் மரியாதை என்ன? 1927-ஆம் ஆண்டு சீனாவின் ஹூனான் விவசாயிகள் போராட்டத்திற்குப் பிறகு, விவசாயிகள் முன்னெடுத்திருக்கும் வரலாற்றுப்பூர்வமான போராட்டம் இதுவென வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 




 எதற்காக இந்த விவசாயப் போராட்டம்?

மத்திய பாஜக அரசு கொரோனா அவசரக் கோலத்தில், ஜனநாயகத்திற்கு விரோதமாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமலும், நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்கப்படாமலும் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. 

அவை... 
 1.அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 
2.விவசாய விளைப்பொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டம் 2020 3.விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 

இந்த மூன்று சட்டங்களையும் நிபந்தனையின்றி ரத்து செய்யக் கோரி விவசாயிகள் நாடு தழுவிய நிலையில் போராட்டத்தை முடக்கிவிட்டிருக்கிறார்கள். 

இந்த மூன்று சட்டங்களையும் அவர்கள் எதிர்ப்பதின் காரணம் என்ன? 

1.விளைபொருட்கள் சந்தகளை கார்ப்பரெட் நிறுவனங்கள் கட்டுப்படுத்தும் சூழல் உருவாகும். 
2.பெரு வியாபாரிகள் அதிகளவில் உணவுப் பொருட்களை பதுக்க வாய்ப்பு ஏற்படும் 
3.வேளாண் திருத்த சட்டங்களை கார்ப்பரேட் நிறுவனகளை ஊக்குவிக்கும் 4.குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டிய பொறுப்பு தட்டிக்கழிக்கப்படும். 

 விவசாயிகள் சுயநலமாக அவர்களுக்காக இந்த போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்பதை சற்று ஆராய்ந்தாலே புரிந்துவிடும். உலகின் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவில் வருகை கோட்டின்கீழ் இருக்கும் மக்களே அதிகம். அவர்களுக்கு கிடைக்ககூடிய ரேஷன் அரிசுக்கும் இதனால் பங்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ( தவிர இதே பிரச்னை வேறு ஒரு வடிவில் நமது நட்டின் கதவையும் தட்டலாம்.) 


 உலகமே திரும்பி பார்க்க வைத்திருக்கும் 'செல்லோ டெல்லி' போராட்டத்தை இந்திய செய்தி ஊடகங்கள் பெரிதாகக் கண்டுக்கொள்ளாத போது, எப்படி இது உலக மக்கள் பார்வையை எட்டியது? நிச்சயமாக சமூக ஊடகங்கள் இல்லை என்றால் அது சாத்தியமில்லாமலே போயிருக்கும். சமூக ஊடகங்களை போராட்டத்திற்கு பயன்படுத்தும் விதம், சலிக்காமல் அதை தோழர்கள் பகிர்ந்து பங்களிப்பு செய்தது, அனைத்துமே மிக நுட்பமாக அவதானிக்க கூடியதாகும்.

 அதோடு ஓவியர்கள் மற்றும் டிஜிட்டல் டிசைனர்களின் பங்களிப்பு அளப்பரியதாகும். நமது நாட்டிலும் நிறைய புகழ் பெற்ற ஓவியர்கள் இருக்கிறார்கள். நமது நாட்டிலும் எத்தனை எத்தனையோ போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அதில் நமது ஓவியர்களின் பங்களிப்பை சல்லடையில் சலித்துவிடலாம். 

 அனைத்திலும் மேலாக பஞ்சாப் விவசாயிகள் நெஞ்சுரமென்றால் என்ன என்பதை போராட்டத்தில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்திருந்த ஹீரோஹிசத்தை, பெரியவர்கள் "அது இல்லை மகளே, ஹீரோ என்றால் என்னைப்பார் என ஒவ்வொருவரும் அவர்கள் பாணியில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். செய்துமுடி அல்லது செத்துமடி என்பார்கள். பெரியவர்கள் அதை செயலாற்றி கொண்டிருப்பதை பார்த்து பாடம் படிக்கிறேன்.

போராட்டத்தில் பெண்கள்

‘செல்லோ டெல்லி’ விவசாயப் போராட்டத்திற்கு பல மாநிலங்களிலிருந்து பெண்களும் அணி திரண்டு வந்துக்கொண்டிருப்பது பார்ப்பதற்கு அத்தனை எளிச்சியை கொடுக்கிறது. பெண் விவசாயிகளை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்களை ஓட்டிக்கொண்டு போராட்டக்களத்திற்கு விரைகிறார்கள். அவர்களுக்கான உணவை சாலை ஓரங்களில் தயாரித்து சாப்பிட்டுவிட்டு போராட்டத்திற்கு விரைகிறார்கள். கையில் பதாகையுடன் அவர்கள் போராட்டத்தில்  தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருப்பது அத்துனை கம்பீரமாக இருக்கிறது.  அது இந்தப் போராட்டத்தின் நம்பிகையை அதிகப்படுத்திக்கொடுத்திருக்கிறது. 


மலேசியாவில் விவசாயிகளும் சில போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். உதாரணமாக 1990-களில் கெடா மாநிலத்தின் நெல் விவசாயிகள் மேற்கொண்ட போராட்டத்தைச் சொல்லலாம். கெடாவில் அராப் சௌதியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இறால் வளர்ப்பு திட்டத்தை மேற்கொண்டது. அதை எதிர்த்து நீதிமன்றம் வரைச் சென்று போராடி வெற்றி பெற்றார்கள் நெல் பயிர் செய்யும் விவசாயிகள். அதேபோல ரப்பர்பால் விலையேற்றம் தொடர்பாகவும் ஒரு போராட்டம் நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

 நான் அறிந்த விவசாயிகளின் பெரிய ஒரு போராட்டம் என்றால் 2015-ஆம் ஆண்டு பேராக் மாநிலத்தில் நடந்தது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்த நிலத்தில், சில தரப்பினர் அத்துமீறி நுழைந்து மேம்பாட்டுத்திட்டத்திற்காக நில ஆக்ரமிப்பு செய்ய நினைத்தது தொடர்பாக விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர். கிட்டதட்ட 30 வட்டாரங்களிலிருந்து விவசாயிகள் அதில் இனபேதம் இல்லாமல் பங்கெடுத்து தங்கள் எதிர்ப்பை மாநில அரசுக்கு தெரிவித்தனர். கடந்தாண்டு கேமரன்மலை விவசாயிகளின் விவசாய நிலம் அழிக்கப்பட்டு அமளி துமிளி ஏற்பட்டதும் நாம் அறிந்த ஒன்றுதான். 

 விவசாயிகளுக்கு விவசாயிகள் அல்லாத நமது ஆதரவு என்ன? எதிலும் தரத்தை எதிர்பார்க்கும் நாம், அதற்காக வாதாடும் நாம், விவசாயிகள் நலனுக்கு என்ன பங்களிப்பு செய்திருக்கிறோம்? மூன்றாம் தரப்பினர் போல, கல்வியறிவு இல்லாதவர்களை போல ஏளனப் பார்வை பார்க்கும் நாம் அவர்கள் கைபடும் உணவைத்தான் வயிற்றுக்கு கொடுக்கிறோம் என்பதை எப்படி மறக்கிறோம்?

 விவசாயிகள் போராட்டம் என்பது தனி ஒரு சமூகத்தின் போராட்டம் அல்ல. அது நமக்கான போராட்டம்; மனித சமூகத்திற்கான போராட்டம். உணவு பொருள்களின் விலை ஏற்றம், விளைநிலங்கள் அழிப்பு அல்லது அபகறிப்பு, இடைதரகர்களின் இடையூறுகள், பயிர்கள் அல்லது தானியங்கள் தனியார்மயமாக்கப்படுதல் உள்ளிட்ட அனைத்தும் விவசாயிகள் பிரச்னை மட்டுமல்ல. பணத்தை செலவழித்து உணவு உட்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் அது பிரச்னைதான். ஒரு காலத்தில் விவசாய நாடாக இருந்த நமது நாடு இன்று தொழிழ்நுட்ப நாடாக மாறியிருக்கிறது. நமது நாட்டிலேயே விளைந்த பல உணவுப் பொருட்கள் இன்று இறக்குமதி செய்தால்தான் நமக்கு கிடைக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். நாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பல விளைபொருட்கள் நமக்கே போதாமையாகிவிட்டது. அதன் வெளிபாடுதான் விளையேற்றம். 

 சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்து போய் டெல்லியில் போராடிய விவசாயிகளுக்காக ஆதங்கம் பிறந்தது. இன்று பஞ்சாப் விவசாயிகள் முன்னெடுத்திருக்கும் போராட்டத்தில் நம்பிக்கை பிறந்திருக்கிறது. அந்த நம்பிக்கை நமது நாட்டு விவசாயிகள் மேலும் பிறக்கிறது. சாமானியர்கள்தான் விவசாயிகள் ஆனால் அவர்கள் சாமானியர்கள் அல்ல என்பதை இந்தப் போராட்டம் மெய்ப்பித்திருக்கிறது.

-நன்றி தமிழ்மலர் (6/12/2020)

சனி, 17 அக்டோபர், 2020

மிஷ்கினின் சைக்கோ

திரைப்படம் பார்க்ககூடிய சூழல் எப்போதும் எனக்கு இருப்பதில்லை. ஆனாலும் மிஷ்கின் திரைப்படம் என்றால் எனக்கு நெருக்கமான ஒன்று ஏதோ  அதில் இருப்பதாக எனக்கு தோன்றும். குறிப்பாக அந்த வயலின் இசை.. மிஷ்கின் திரைப்படத்தில் அந்த வயலின் இசையானது தனிக்கதையாகவே ஓடும்.  நான் அப்படியாகத்தான் அந்த இசையைப் பார்க்கிறேன்.

சைக்கோ திரைப்படம் குறித்து பல கருத்துகள்  உலாவிக்கொண்டிருக்கின்றன. சிலர் லோஜிக் உதைக்கிறது என்கிறார்கள். சிலர் சரியாக எடுக்கப்படாத திரைப்படம் என்கிறார்கள்.  இதெல்லாம் கருத்தில் மிஷ்கின் கொள்வதில்லையா என்று விமர்சனம் சொல்கிறார்கள்? ஆசிரியர்கள் பார்க்க வேண்டிய படம் என்கிறார்கள். ஏன் அந்த டீச்சரைக் கொல்லாமல் வைத்திருந்தான் அந்த சைக்கோ என்கிறார்கள்.. இன்னும் என்னென்னவோ… என்னென்னவோ…

நான் படம் பார்த்த மறுநாளிலிருந்து மிஷ்கின் திரைப்படம் குறித்த சில நேர்காணல்களைப் பார்த்தேன். குறிப்பாக மிஷ்கினுடைய நேர்காணல் அது ஒரு இலக்கிய வாசிப்பின் மாதிரியாக இருந்தது. எனக்கு அந்தப் படத்தைப் பார்த்தப் பிறகு பேசவேண்டும் என்று நினைத்தது இரண்டு விஷயங்களைத்தான். திரைப்படம் விமர்சனம் சார்ந்து ஒரு அறிவார்ந்த விமர்சனத்தைக் கொடுப்பதற்கு ஏற்ற ஆள் நான் இல்லை என்றாலும், வெகுஜன மக்கள் பார்வையிலும் பொதுபுத்தியிலும் மனசுக்கு தோன்றுவதை பேசுவதற்கு யாருக்கும் உரிமை இருக்கிறதல்லவா…

மிஸ்கின்  திரைப்படத்தில் வரும்  சைக்கோவுக்கு இரண்டு வரலாறுகள் இருக்கிறது. ஒன்று உண்மையான சைக்கோ கில்லர் தேட் பேண்டி.  மற்றொன்று அங்குலி மாலா எனும் பெயருக்கு பின்னாள் இருக்கும் வரலாறு. 

நிஜ சீரியல் கிள்ளர் தேட் பேண்டி. 

இந்தப் பெயரை மிகச் சமீபத்தில்  ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய ஒரு ஆவணபடத்தில் பார்த்தேன்.  கிரைம் சம்பந்தப்பட்ட சேனல் அது. படத்தில் சைக்கோ வில்லன் அங்குலி பெண்களை கடத்தும்போது  காலில் ஊனமுள்ளவர் போல நாடகமாடுவார்.  அது அப்படியே தேட் பேண்டியின் பாணி.  தேட் பேண்டி குழந்தை பருவத்திலேயே மனதளவில் பெரும் பாதிப்பை சந்தித்தவர். பெற்றோர்களின் புறக்கணிப்பு, முதல் காதலின் தோல்வி என அவருக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களும் தோல்விகளும் அவரை ஒரு சைக்கோவாக மாற்றியது. தேட்  பேண்டி கடத்தி கொன்ற பெண்கள் அனைவரும் நெற்றியில் நடுவகிடு எடுத்து தலைசீவிய பெண்கள். சில பெண்களை அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றிருக்கிறார். அவர் கடத்தி கொன்ற பெண்களில் பாலியல் தொழில் செய்பவர்கள் உட்பட 12 வயது சிறுமியும் அடங்குவார் என்பதுதான் அதிர்ச்சியான விஷயமாகும். அவர்களை கொல்வதற்கு தேட் பேண்டி தேந்தெடுத்த காரணம் அவர்கள் நடுவகிடு எடுத்து தலைவாரியதுதான். தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்த அவரின் முதல் காதலி நடு வகிடு எடுத்து தலைசீவுபவர். பெண்களை கடத்தி கொலை செய்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் அவருக்கு ஒரு காதலியும் இருந்திருக்கிறார்.  வீட்டில் அவரோடு குடும்பம் நடத்திக்கொண்டு அவருக்கும் தெரியாமல் ஒரு சைக்கோ வாழ்க்கையையும் வாழ்ந்திருக்கிறார் தேட் பேண்டி. 


இத்தனைப் பேரை , எங்கு, எப்படி, கொலை செய்தேன் என்று  விளக்கமாக சொல்லும்வரை போலீசால்கூட அவரைப் பிடிக்க முடியவில்லை. பிறகு எப்படி போலீசில் சிக்கினார் தேட் பேண்டி? ஒரு நிதானமாக கார் ஓட்டுனர் இல்லை அவர். சாலையில் மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிலையில் அவர் தனது காரை செலுத்துவார். அந்த மாதிரி கார் செலுத்திக்கொண்டு வரும்போது ஒரு முறை அவர் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டார். பிறகு காரிலிருந்த ஆயுதங்கள் சில வற்றில் படிந்திருந்த ரத்தக் கறைகள் போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்த அவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். தனக்காக வாதாட அரசு தரப்பு வக்கில் இருந்த போதும் அதை நிராகரித்த அவர் தனக்காக தானே வாதாடினார். ஆனால், அதில் அவர் தன்னை நிராபராதியென நிறுபிக்க தவறினார்.. இந்த வழக்கு விசாடனையில் இருந்தபோதே சிறையிலிருந்து தப்பித்து 5 நாட்கள்  காட்டின் ஒரு மறைவிடத்தில் தங்கியிருந்து மீண்டு வந்தார்.  ஒரு காரை திருடி எடுத்துக்கொண்டு வேறொரு ஊருக்கு போய்விட்டார். சில கைவேலைகளை செய்துக்கொண்டு காரிலேயே சில நாட்கள் வாழ்கை நடத்திக்கொண்டிருந்தார். அவருடைய கிரிமினல் மூளை அவரை இயல்பு வாழ்கையை வாழவிடவில்லை. மீண்டும் கொலை செய்ய தொடங்கினார் தேட் பேண்டி. 



இந்தத் தொடர் கொலைகள் நடந்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள்,  தேட் பேண்டி  தோல்வியில் முடிந்த ஒரு கொலை முயற்சியில் ஆத்திரம் கொண்டு, ஒரு லேடிஸ் ஹோஸ்டலில் நுழைந்தார். பெண்கள் எல்லாரும் நித்திரையில் இருந்தனர். வெறிக்கொண்டு அவர்களை தாக்கினார் தேட் பேண்டி. அந்தக் கண்மூடித்தனமான தாக்குதலில் பல பெண்கள்  மரணமடைந்தனர். கடுமையான காயங்களுடன் முகம் உடைக்கப்பட்ட நிலையில்  ஒரு பெண் உயிர் தப்பினார். எங்கோ வெளியில் சென்றிருந்த வேறொருபெண், அப்போதுதான் ஹோஸ்டலுக்கு வர,  மரண ஓலங்கள் கேட்டு, ஓரிடத்தில் பதிங்கிக்கொண்டார். 

வெறியாட்டம் ஆடிய தேட் பேண்டி மிக ஆவேசமாக, ஹோஸ்டலிலிருந்து வெளியேறி, தனதுக் காரை மிக  ஆபத்தான முறையில்  ஓட்டிச் சென்றுக்கொண்டிருக்கையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதன் பிறகு காரை சோதனையிட்டதில் தேட் பேண்டி வசமாக  மாட்டிக்கொண்டார்.  கொலையில் சம்பந்தப்பட்ட ஆயுதங்கள்,  அதிலிருந்த ரத்தக் கறைகள் என சோதனையிட்டதில் காணாமல் போனவர்களின் அடையாளத்தை அது காட்டிக் கொடுத்தது. பின்னர், தொடங்கப்பட்ட விசாரணையில், இதற்கு முன்பு அவர் போலீசிடமிருந்து தம்பிச் சென்றது உட்பட அனைத்தும் அம்பலமானது.  இனி தப்பிக்க முடியாது என்ற முடிவு செய்தப் பிறகுதான், தான் செய்த அனைத்து கொலைகளையும் அவரே  விவரித்தார். காணாமல் போனவர்கள் என்ற பட்டியலில் இருந்தவர்கள் கொல்லப்பட்டிருப்பது அப்போதுதான்  தெரியவும் வந்தது.  அதுவும் எங்கே எப்படி என தேட் பேண்டியே போலீசைக் கூட்டிக் கொண்டு போய்  காட்டி தெரியப்படுத்தியது குறிப்பிட வேண்டிய விஷயமாகும். 

போலீசிடம் தேட் பேண்டி மாட்டிக் கொள்வதற்கு முன்பே, ஏதோ ஒரு வகையில் சந்தேகம் ஏற்பட, இவரின் நடவடிகையில் மாற்றம் இருப்பதாகவும், போலீஸ் அவரை விசாரிக்க வேண்டும் என்றும் தேட் பேண்டியிடம் லீவீங் டுகேதராக இருந்த அவரின் காதலி புகார் அளித்திருந்தார் என்பதும் சொல்ல வேண்டிய விஷயமாகும்.

அங்குலி மாலா

படத்தில் வரும் கொலைகாரனுக்கு அங்குலி மாலா என்ற பெயரை சூட்டியிருக்கிறார் மிஷ்கின். அங்குலி மாலா புத்தர் காலத்தில் வாழ்ந்த புத்தரை கொல்வதற்காக போன ஒரு சைக்கோ கில்லராவார்.  பீகார் காட்டுப்பகுதியில் வாழ்ந்த அங்குலி கொள்ளையடிக்கப்பட்ட மக்களின் விரலை வெட்டி மாலையாக அணிந்துக்கொள்வானாம்.  தன்னுடைய குரு 1000 சுண்டு விரல்களை தட்சணையாக கேட்டதின் பேரில் நடந்திருக்கிறது இந்தக் கொடூரம். படத்தைப் பார்த்தவர்களுக்கு தெரியும், சைக்கோ படத்தில் அங்குலிக்கு ஒருவிரல் இல்லை. சின்னதொரு நூல் இழையில் இந்தக் கதையை பேசியிருக்கிறார் மிஸ்கின்.  

இந்தப் படத்தில் என்னைக் கவர்ந்த இன்னொரு விஷயம் பெண் பாத்திரங்களுக்கு மிஸ்கின் சூட்டியிருக்கும் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர்களின் பெயர்கள். குறிப்பாக நித்தியா மேனனுக்கு மலையாள எழுத்தாளர் கமலா தாஸின் பெயர் சூட்டியிருந்தார். இப்படி எல்லாரின் பெயருக்கும் பின் ஒரு வரலாறைச் சத்தமில்லாமல் பேச வைத்திருக்கிறார் மிஷ்கின்.

பின்னணி இசை, உன்னை நினைச்சி நினைச்சி என்ற பாடல் வழியாக தன்னைப் பற்றி இந்தக் காலத்து இளைஞர்கள் மத்தியில் பேச வைத்திருக்கிறார் இசை ஞானி.  ஒரு சில லாஜிக்களை கிள்ளி எறிந்துவிட்டுப் பார்க்கிறேன், சைக்கோ எனக்கு பிடித்திருக்கிறது. அவ்வளவுதான். 

புதன், 30 செப்டம்பர், 2020

Yogi (Writer Malaysia)


 
Yogi  

ialah nama pena bagi Yogesvary Periasamy, yang dilahirkan di Teluk Intan, Perak dan kini menetap di Batu Caves, Selangor. Beliau merupakan seorang wartawan akhbar Nam Naadu serta aktif menulis karya sastera di pelbagai akhbar dan majalah Tamil di Malaysia.

Kumpulan esei Thudaikapadatha Ratha Karaikal (2012) merupakan buku sulung beliau yang menghimpunkan pengalaman peribadi, khususnya tentang perjuangan dan penyesuaian hidup di bandar. Karya ini menjadi sumber semangat dan pedoman kepada para pembaca, terutamanya wanita luar bandar yang memulakan kehidupan baharu di persekitaran urban.

Buku kedua beliau berjudul YADCHI (2016), sebuah kumpulan puisi.
Buku ketiga, Pengaluku Sorkal Avasiya? (2019), merupakan koleksi karangan yang ditulis berdasarkan pengalaman hidup dan pemerhatian beliau di Malaysia.
Buku keempat bertajuk Enumpothu pula ialah sebuah lagi kumpulan puisi yang memperlihatkan kematangan pemikiran dan kepekaan sastera penulis.

Selain menulis, Yogi pernah berkhidmat sebagai editor laman sesawang www.vallinam.com.  , sebuah platform yang menghimpunkan karya penulis Tamil generasi muda. Beliau juga merupakan pengasas Penerbitan Koogai sejak tahun 2019. Di samping itu, beliau aktif sebagai blogger dan wartawan Tamil, dengan karya-karyanya boleh diakses melalui laman web berkaitan.

Yogi turut mempunyai pengalaman luas dalam pelbagai bidang lain, antaranya sebagai jurugambar, pengembara, aktivis dan pekerja lapangan (fieldworker), yang banyak mempengaruhi tema serta perspektif penulisannya.

Biodata ini dipaparkan sebagai sebahagian daripada projek Antologi Cerpen Terjemahan Tamil.

எங்கள் வீடு நாங்கள் அறியாமலே இல்லாமல் ஆகிவிட்டது by YOGI PERASAMY

மலேசிய பழங்குடி மக்களின் தலையாய ஒரு பிரச்னைக்காக அவர்களிடம் கலந்தாலோசிக்க ஒரு குழுவாகச் சென்றிருந்தோம். சுவாராமின் தோழர் சுரேஷ், சமூக செயற்பாட்டாளர்  அமினா, பழங்குடிகள் செயற்பாட்டாளர் ஜெனிதா, பிஎஸ் எம் கட்சியின் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம் மற்றும் நான் ஆகியோர் அந்தக் குழுவில் இருந்தோம்.


கிளந்தான் மற்றும் பஹாங் எல்லையில் இருக்கிறது லோஜிங் எனும் இடம். எந்த ஒரு வரவேற்பு பலகையும் இல்லாமல் மௌனமாக தன் அழுத்தங்களை சுமந்தபடி இருக்கிறது செண்ரோட்  எனும் ஓர் அழகிய பூர்வக்குடி கிராமம். மழை பெய்து விட்டிருந்தது.  கேமரன்மலை தொடர் என்பதாலும் மழையின் காரணத்தினாலும்  குளிர் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. 

எங்களின் வருகையை முன்கூட்டியே தெரிய படுத்தியிருந்தபடியால் எங்களின் வருகைக்காக காத்திருந்தனர் கிராமத்தைச் சேர்ந்த பூர்வக்குடி மக்கள். தெமியாங் இனக்குழுவைச் சேர்ந்த அவர்கள்,  புன்னகை குறையாத முகத்துடன்  எங்களை வரவேற்றனர்.  தங்களுக்கு ஏற்படும் பிரச்சனையை தாங்களாகவே தீர்த்துக்கொள்பவர்கள்தான் பழங்குடிகள். ஆனால், தற்போது பழங்குடிகளின் இந்த தனித்தன்மையை சோதித்தபடியே இருக்கின்றனர் சில காப்ரேட் முதலாளிகள் என்றுதான் தோன்றுகிறது.



மிகச் சாதாரணமாக அவர்களின் வசிப்பிடத்திற்குள் அத்துமீறி நுழைவது மட்டுமல்லாமல் அவர்களின் அனுமதியின்றியே  அவர்களின் நிலத்தை அபகரித்து அல்லது அபகரிப்பதற்கான வேலையை தொடங்குகின்றனர் இந்தப் பண முதலைகள்.

தற்போது இந்தப் பூர்வக்குடி கிராமத்து மக்களின் குடிநீர் தடாகத்தில் கையை வைத்திருக்கின்றனர் இவர்கள். கிட்டதட்ட 9 நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படும் இந்த விவகாரத்தில் முதற்கட்டமாக அவர்கள் குறிவைத்திருக்கும் இடம் துப்புரவு செய்தாகிவிட்டது.  அந்நேரத்தில் பூர்வக்குடி மக்கள் கொடுத்த நெருக்கடியில்  வந்த வேலையை முடித்துவிட்டு அவர்கள் கிளம்பிவிட்டதாக  தெரிவிக்கப்பட்டது.



இதன் பிறகு, பெரும் அச்சத்தில் இருக்கும் அவர்கள் இவ்விவகாரத்தை  சட்டப்பூர்வமாகவும் அதே வேலையில் ஆதாரப்பூர்வமாகவும் போராடி, குடிநீர் தடாகத்தை மீட்க தயாராகிவிட்ட அவர்கள்  அதற்கான அடுத்தக் கட்ட நகர்வுக்காக இந்தச் சந்திப்பை மேற்கொண்டனர்.

முன்னதாக கோத்தா பாருவைச் சேர்ந்த டான்ஶ்ரீ அவரின் பிரதிநிதி  என்று கூறிக்கொண்ட ஒருவர், (அவர் எந்த டான்ஶ்ரீ அவரின் பெயர் ஆகிய விவரங்களை பூவக்குடிகளிடம் தெரியப்படுத்தப்படவில்லை)  பூர்வக்குடிகளின் குடிநீர் தடாகம் அமைந்திருக்கும்  இடத்தை மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்போவதாக கூறியிருக்கிறார். தொடர்ந்து  நிறுவனத்தின் பெயர் அட்டைமட்டும் அவர்களிடம் கொடுகப்பட்டது. இந்த விவரத்தோடு எந்த ஒரு விவரமும் கொடுக்கப்படவில்லை.



பழங்குடிகள் இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்திருக்கின்றனர். ஆனாலும் அது தொடர்பான  எந்த வகையான எதிர்வினையும் அவர்களுக்கு கிடைகவில்லை.  சுமார் 100 குடுங்கள் கொண்டிருக்கும் அந்தக் கிராமத்தில் 549 பேர் வசிக்கின்றனர். 

“எங்களின் அடிப்படையான பல தேவைகளை நாங்கள் இழந்துவிட்டோம்.  எங்களுக்கு இந்தக் கிராமத்தில் கிடைக்கும் குடிநீர்கூட சுகாதாரமானது என்று கூற முடியாது. சேற்று நிறத்தில்தான் எங்களுக்கான நீர் வருகிறது.  அதையும் பறிக்க நினைப்பது எந்த வகையில் ஞாயம்” என அவர்கள் வருத்தத்தையும் ஆதங்கத்தையும் வெளிபடுத்தினர்.  கடந்த நாட்களில் அவர்களைச் சுற்றியிருந்த 2000 ஏக்கர் வன நிலங்கள்  அழிக்கப்பட்டுவிட்டது. அதன்காரணமாகவும் அவர்களின் குடிநீர் மிக மோசமாக பாதிபடைந்திருக்கிறது. இந்நிலையில் அவர்களின் குடிநீர் தடாகத்தில் நிரந்தரமாக கைவைக்க துணிந்திருக்கும் காப்ரேட் நிறுவனங்களை எதிர்கொள்ள இந்தப் பூர்வக்குடி மக்கள் தயாராகிவிட்ட நிலையில், அவர்களின் இந்தப் போராட்டத்திற்கு கைகொடுக்க மேற்கூறிய அமைப்புகள் முன் வந்திருக்கின்றன.

தங்களுக்கான தேவையை வனத்தில் பெற்றுவந்த அவர்கள், சாதாரண மக்களைப்போல சம்பளத்திற்கு வேலைக்கு சென்று வருகின்றனர். நாங்கள் புறப்படும் நேரத்தில் காலையில் வேலைக்குச் சென்ற பெண்கள் சிலர் வேலை முடிந்து அப்போதுதான் திரும்பினர். தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று திரும்பும் நம் அம்மாக்களை அவர்கள் ஞாபகப்படுத்தினர்.  இன்று பல தோட்டங்களில் நம்மவர்களே இல்லாமல் போய்விட்ட  நிலையில் அந்த இடத்தைப் பூர்வக்குடிகள் நிரப்புகிறார்களா என்ற கேள்வி நிச்சயமாக என்னை  அச்சம் கொள்ள வைக்கிறது.

பூர்வக்குடிகள் மிக உன்னதனானவர்கள்.  வேற்றுமைகள் அற்றவர்கள்.   ஒருவரை சார்ந்திருக்கவேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. பணத்தின் அவசியம் அவர்களுக்கு இல்லவே இல்லை.  ஆனால், இன்று அவர்கள் ஒரு சராசரி மனிதர்களாக ஆக்கப்பட்டுவிட்டு அவர்களின் உன்னதத்தை கெடுத்த பாவத்தை யார் சுமக்கப் போவது? இவர்களுக்கு மட்டுமல்ல இவர்களைப் போல நாட்டில் இருக்கும் மற்ற இன பூர்வக்குடிகளும் ஏதாவது பிரச்னையோடுதான் போராடிகொண்டிருக்கின்றனர்.  நாம் அதையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நமக்கு என்ன நஷ்டம் என்று. 


 

அந்தக் கிராமத்தைவிட்டு நாங்கள் கிளம்பும்போது தேங்கிக்கிடந்த  மழைநீரில் சில பூர்வக்குடி குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். ஒரு வேளை எந்தக் கவலையும் இல்லாத தங்களை நோக்கியிருக்கும் பிரச்னைகள்  என்னவென்று தெரியாத இறுதி தலைமுறை  பூர்வகுடி குழந்தைகள் இவர்களாகக்கூட இருக்கலாம்.

அந்தக் கிராமத்தைவிட்டு நாங்கள் கிளம்பும்போது தேங்கிக்கிடந்த  மழைநீரில் சில பூர்வக்குடி குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர்.  எந்தக் கவலையும் இல்லாத, தங்களை நோக்கியிருக்கும் பிரச்னைகள்  என்னவென்று தெரியாத இறுதி தலைமுறை  பூர்வகுடிக் குழந்தைகள் இவர்கள்தான் போல. 


 

     


  

திங்கள், 28 செப்டம்பர், 2020

YOGI PERIASAMY (YOGI SANDRU) BIOGRAPHY


YOGI

Yogi who is born and bred in Teluk Intan, Perak Malaysia, is a journalist, activist, photographer Feminist and activist actively involved in the malaysian literacy. She is a firm believer that women should be respected, whether they are one’s daughter, wife, girlfriend, and so on. Her belief is that women are in no way inferior to men. Her interests range from music, painting, nature, film, solitude, forest, tourism, reading and photography. Getting in touch with nature and exploring history has been an important part of her life. She also believes that visual images can be witnessed beyond time as they stand the test of time. She introduced koogai publication and actively moving in publishing books and launching it. She currently working at (PSM) Malaysia socialist party.

Previous Participations in Oodaru Tamil Women Forum:

Malayakam (Sri Lanka - 2015)

Penang (Malaysia - 2016) as a Organizer

Mumbai (India -2017)

Mattakkalappu (Srilanka - 2018)

Singapore (2019) - Organizer Team

 

''WORD AT THE SPEED OF LIGHT'' ( Her photo exhibition took in Singapore 2019)

Her publications include: (TAMIL LANGUAGE)

1. THUDAIKAPPADATHA RATHA KARAIGAL (Bloodless Bloods) (columns Collection, 2012)

2. Yakshi (Poetry Gallery, 2016)

3.PENGALUKKU SORKAL AVASIYAMAA? ( Do Women Need Words?) (Article Collection, 2019)

4. ENUM POTHU (POEM COLLECTION, 2020)

5. Korani Nachil ((Article Collection, 2021)