செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

பெண்கள் வாய்த்திறந்தால்- இந்த ஆணாதிக்க சமூகத்தினால் தாங்கத்தான் முடியுமா?

 கடந்த சில நாட்களாக அவதானித்து நான் கூற வருவது இதுதான்.  டெல்லியில் நடந்துக்கொண்டிருக்கும் விவசாயப் போராட்டத்தில் கணிசமான பெண்கள் படையெடுத்து வந்தபோது, பெண்கள் ஏன் கஷ்டப்படனும் திருப்பி அனுப்பிவிடுங்கள், அல்லது திரும்பி போய்விடுங்கள் என்று மோடி அரசாங்கம் தெரிவித்தப்போது, அதற்கு பெண்கள் மிக தரமான சம்பவத்தை செய்து முடித்து,  ஏன் அவர்கள் திரும்பி போகமுடியாது என்பதை தெரிவித்தனர்.  பெண்கள்  ஈடுபட்ட  டிரெட்கர் பேரணி  விவசாயப் போராட்டத்தில் மிகப் முக்கியமான பேசக்கூடிய விஷயம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

அதனைத்தொடர்ந்து இந்தப் போராட்டமானது மேலும்,  உலக மக்கள் பார்வையில் விரிவடைந்தது.  வெளிநாட்டிலிருந்து பல பிரபலங்களும் பிரபலம் அல்லாதவர்களும் டிவிட்டர் வழி குரல் கொடுத்தார்கள்.  முகநூலில் எழுதினார்கள். கெனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட தொடர்ந்து விவசாயப் போராட்டம் குறித்து பேசியது செய்திகளாக மாறியது.  இருப்பினும்,  பெண்களின் குரல்தான் கவனிக்ககூடியதாகவும் பலரும் திரும்பிப் பார்க்ககூடிய வகையிலும் இருந்தது; தொடர்ந்து இருந்தும் வருகிறது.  பெண்களின் குரலுக்கு, சங்கிகளின் அதாவது சங்கிகளின் கூட்டத்தில் இருக்கும் ஆண் சங்கிகளின் எதிர்வினை எப்படி இருக்கிறது என்றால், மிகக் கேவலமாக, கிட்டதட்ட தீவிரவாதிகளைப்போல இருந்தது.

ஆபாச வீடியோவை வெளியிடுவோம், உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்; அவள் ஒழுங்கா? பத்தினியா? இறையாண்மையை கெடுக்கிறார்கள்… , லப லபா.. லப லபா.. லப லபா.

தற்போது திஷா ரவியின் கைது நடவடிக்கை, உலக அளவில் சினத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.  இத்தனைக்கும்  திஷா செய்தது மாபெரும் குற்றமல்ல. டெல்லி விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பிய   சூழலியலாளர் கிரேட்டா துன்பர்க்-க்கு ஆதரவாக செயல்பட்டார் என்று டெல்லி போலிசார் கைது செய்திருக்கிறார்கள்.   கிரேட்டா துன்பர்க் கூலிக்கு வேலைசெய்யும் செயற்பாட்டாளர் அல்ல. அவரின் தந்தை முதற்கொண்டு இயற்கைக்காக போராடியவர்கள் என்பது இங்கு கவனிக்ககூடியது.



கிரேட்டா துன்பர்க்  வழியைப் பின்பற்றி திஷா ரவி முன்னெடுக்கும் பருவநிலை மாற்றம் தொடர்பான போராட்டங்களை சம்பந்தப்படுத்தி இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள்.  இத்தனைக்கும் திஷா கடந்த சில மாதங்களாகவே பருவநிலை மாற்றம் தொடர்பாக தீவிரமான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதோடு செயற்பட்டும் வருகிறார். அப்போதெல்லாம் இந்த கூட்டத்திற்கு திஷா என்பவர் குற்றவாளையாக தெரியவில்லை.  எப்போது கிரேட்டா துன்பர்க்  என்பவர் விவசாயிகளுக்காக குரல்கொடுத்தாரோ மோப்பம் பிடிக்க தொடங்கிவிட்டனர் சங்கிகள்.  அவர்களின் கேவலமான மோப்பத்தினால் அறியப்படுத்தியது திஷா  ராஜதுரோகத்தை செய்துவிட்டாராம்.  பெண்களின் குரல்களுக்கு கதறுகிறார்கள் கதறுகிறார்கள் கதறி துடிக்கிறார்கள்  ஆணாதிக்க சங்கிகள்.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக