செவ்வாய், 26 ஏப்ரல், 2016

"யோகி" எல்லையில்லா வானம்"யோகி" எல்லையில்லா வானத்தை பனித்துளியொன்று அறிமுகப்படுத்துவதாய் உணர்கிறேன் 
என்றாலும், ஞானக்குகையில் சாதமின்றி மூழ்கியிருப்போருக்கு இவளைக்கண்டால் ஒரு பெருமூச்சாவது வெளியாகிடலாம் என்ற ஆவலில்..
இவள் ஒரு விருட்சம். எல்லையில்லா பரிமாணங்கள் கொண்டவள்.
மனிதத்தை மையாக்கி எழுதுபவள்
-பரீட்சன் 
ஏப்ரல் 20 
நேரம் மாலை 6.13
------------------------------------------------------------------
நான் கரைய தொடங்கியிருக்கிறேன்
அது பனியோ அல்லது
குழந்தைகள் உண்ணும் ஐஸ்கிரீம்
மாதிரியோயான கரைதல் அல்ல
ஒரு பாறையில்
சின்ன எறும்பு ஊர்ந்து
கரைதல் மாதிரியான கடினமானது
சொல்வதற்கு வேறெதுவும்
இல்லை எனும்படியால்
யாரும் கேள்விகள் கேட்பதற்கு முன்
நான் கரைந்துவிடுகிறேன்
குழந்தை ஒன்று 'அ' வை
தவறாக எழுதிவிட்டதாக
அழித்துக்கொண்டிருந்தது...
-யோகி-

நன்றி பரீட்சன்
https://www.facebook.com/profile.php?id=100010263431411&fref=ts

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக