'மீன் பாடும் தேன் நாடு'
13 செம்படம்பர் இரவு தொடங்கும் நேரத்தில் நான் ஏறிய விமானம் கொழும்பில் தரையிறங்கியது. எந்தத் தடையும் இல்லாமல் 10 நிமிடத்தில் எல்லாச் சடங்குகளையும் முடித்துக்கொண்டு, விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்தேன். ரஞ்சி(மா)வும் ஔவை(மாவும்)எனக்காகக் காத்திருந்தனர்.
ரஞ்சி மா-வை நான் என் தாயைப்போல உணர்பவள். ஒவ்வொரு பெண்கள் சந்திப்பும் தாயை காணத்துடிக்கும் தவிப்புடனையே தொடங்கும். ஔவை-யை நான் இப்போதுதான் முதல்முறையாகச் சந்திக்கிறேன். அவர் முக்கியமான ஆளுமை என எனக்கு முன்பே தெரியும். கவிதை வாயிலாக அவர் எனக்கு எழுத்தால் அறிமுகம் ஆனவர். நேரில் இன்னும் இலகுவாகப் பழக இனியவராகவும் இருந்தார். இலங்கை பயணத்தின் தொடக்கம் சிறப்பாகவே இருந்தது.
எனக்கு முன்பே இந்தியாவிலிருந்து வந்திருந்த மாலதி மைத்திரி , கல்பனா (மா), யாழினி ஆகியோர் மட்டக்களப்புக்கு கிளம்பிவிட்டிருந்தனர். மறுநாள் விடிய (செப்டம்பர் 14) சென்னையிலிருந்து வந்திறங்கிய தோழியர் சுகிர்தராணி, கவின்மலர், ஸ்னேகா , விஜய (மா) ஆகியோரை அங்கிருந்தே அழைத்துக்கொண்டு, நாங்கள் ( ரஞ்சி, யோகி, ஔவை, கோகில) மட்டக்களப்பிற்கு கிளம்பினோம். இந்தப் பயணத்திற்காக வேன் ஏற்பாடு செய்திருந்தார் ரஞ்சி மா. கிட்டதட்ட ஆறிலிருந்து 7 மணிநேரப் பயணம் அது. விளாம்பழம் வாசனை வண்டியில் கமகமக்க, வீட்டிலிருந்து செய்து கொண்டு வந்திருந்த புட்டு வாழைப்பழம் முதலிய உணவு வகைகளை பகிந்து சாப்பிட்டபடியே நாங்கள் மட்டகளப்பை அடைந்தோம். இருள் சூழ தொடங்கியிருந்தது.
2018-ஆம் ஆண்டுக்கான ஊடறு பெண்கள் சந்திப்பை மட்டக்களப்பைச் சேர்ந்தவரும் சூரிய பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவருமான விஜி (மா) பொறுப்பெடுத்து ஒழுங்கு படுத்தியிருந்தார்.
மிக அழகான ஊர். 'மீன் பாடும் தேன் நாடு' என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு கிழக்கு மாகாணத்தின் மிகப் பெரிய நகரம். சென்ட் ஜோசப் தேவாலயம் திருமலை, ஊறணி வீதியில் எங்கள் சந்திப்புக்காக தேர்ந்தெடுத்திருந்த இடமாகும். இரு புறங்களிலும் வாவி சூழ இயற்கை வளங்கள் செழித்திருக்க பார்த்த மாத்திரத்திலையே மட்டக்களப்பு எங்களுப்பு பிடித்துப் போனது. மேலும், சந்தித்த வரையில் அன்பாகப் பழக்கக்கூடிய ஜனங்களும் அவர்களின் புன்னகை முகமும் எங்களை அந்நிய நிலம் என்று உணராமல் மறுநாள் பெண்கள் சந்திப்புக்குத் தயாரானோம்..
தொடரும்.. .
இரண்டாம் பகுதி வாசிக்க https://yogiperiyasamy.blogspot.com/2018/10/2.html

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக