செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

நான் உன்னை பிரிகிறேன்


 என் அன்பே
மூன்றாவது முறையாக
இன்று உன்னை பிரிகிறேன்

பிரிதல் உனக்கும் ஓர் ஓவியத்துகான
புள்ளியை கொடுக்கலாம்
புள்ளிகளைக் கோடுகள் ஒன்றினைக்கலாம்
நீ அவற்றுக்கு வர்ணம் தீட்டி
அழகான படம் வரைந்து காட்டி
அதைக்
காட்சிக்கு வைக்கலாம்
என் அன்பே
ஓர் ஓவியனின் ஓவியம் போல் இல்லை
இந்த பிரிவு
அதை எப்போது நீ அறிவாய்?

நீ கொண்டாடும் வான் கோவும், ஆதி மூலமும், காஜா மேனும்
உன் தூரியை எடுத்து
இப்பிரிவை தீட்டப்போவதில்லை

என் அன்பே
நீ அறிவாயா
இந்த மூன்றாவது பிரிவில்
இரு தினங்களுக்கு முன் 
இலையுதிர் காலம் தொடங்கியது
பாதி இலை உதிர்ந்த 
அந்த நிழல் மரத்தில்
அமரும் சாம்பல் நிறப்பறவை 
சொல்லும் செய்தியை
நீ அறிவாயா
என் அன்பே

இன்று
மூன்றாவது முறையாக உன்னை பிரிகிறேன்
என்பதை

4 கருத்துகள்:

  1. நான் உன்னைவிட்டு பிரிவதுமில்லை கைவிடுவதுமில்லை'ன்னு ஒங்க ஆத்துக்காரர் அந்தப்பக்கம் சொல்லிகிட்டு இருக்காருங்க :) இப்படியே கவிதை சொல்லி ஓட வச்சிராதீங்க

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு