புதன், 24 ஜூன், 2026

கூகை நிறுவனத்தின் புத்தகங்கள் அன்பளிப்பு

 தனியார் பல்கலைக்கழகத்திற்கு 100 புத்தகங்கள்  அன்பளிப்பு செய்யப்பட்டன

புத்தகங்கள் அறிவின் பெரும் செல்வமாகும். வாசிப்பு பண்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், கூகை நிறுவனம் தொடர்ந்து புத்தகங்களை மாணவர்களுக்கு அன்பளிப்பு செய்து வருகிறது.  

கடந்த மாதம் ஜொகூர் மாநிலத்தில் நடைபெற்ற மலாயா கணபதி மற்றும் வீரசேனன் விழாவில் மாணவர்கள் கணிசமாக கலந்து கொண்டனர். அந்த விழாவில் பார்வையாளர்களாக கலந்து கொண்ட பள்ளிகளுக்கு கூகை நிறுவனத்தின் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டதோடு, எல்லா மாணவர்களும் பயன் பெரும் வகையில் பள்ளி நூல்நிலையத்தில் அப்புத்தகங்களை சேர்க்கும்படி கூறியிருந்தோம்.

இந்நிலையில் Kolej Universiti Yayasan பல்கலைக்கழக மாணவர்கள், தங்கள் கல்லூரியின் நூலகத்தில் தமிழ்ப் புத்தகங்கள் இல்லை என்ற தகவலை தெரிவித்திருந்தனர். கல்லூரியின் தமிழ் மொழிக் கழகத்தில் தலைவரான சகோதரர் திவாகர், அது குறித்து மேலும் தகவல்களை வழங்கினார். கல்லூரியில் தமிழ்ப் புத்தகங்கள் வைப்பதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள கூகை நிறுவனம் பரிந்துரை செய்தது. அனுமதி கிடைக்கும் பட்சத்தில் 100 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்குகிறோம் என்று கூறியிருந்தோம்.

மாணவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெகுமதிதான் இந்தப் புத்தகப் பரிசு. கல்லூரி நிர்வாகமும் அந்த அன்பளிப்பை மதித்து புத்தகங்களை கையளிக்கும் நாளை விழாவாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் அர்த்தமுள்ள நிகழ்வை ஏற்பாடு செய்த KUYPJ தமிழ் கழகம் மற்றும் மாணவர் நலப் பிரிவு (HEP) ஆகியோருக்கு சிறப்பு பாராட்டுகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக