
சுதந்திரம் அடைந்த பல நாடுகள் போராட்டத்தை முன்னெடுத்த பிறகுதான் அதைப் பெற்றிருக்கின்றன. மலேசியாவைப் பொறுத்தவரை 1940-களில் நடந்த பல மக்கள் போராட்டங்கள் மறைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றன. இருந்தாலும், என் தலைமுறையில் பெர்சே பேரணிதான் மலேசியாவில் நான் பார்த்த மாபெரும் போராட்டம் என்று சொல்லலாம். அதன் பிறகு இந்தியர்களுக்கு உரிமைக் கோரும் போராட்டமாக ஹிண்ராப் போராட்டத்தைச் சொல்லலாம். அதன் பிறகு மீண்டும் பெர்சே 2.0 போராட்டம், தொடர்ந்து இத்யாதி இத்யாதிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
![]() |
| சாங் லே காங், தான் கார் ஹிங், பாக்ரி |
ஆகஸ்ட் 1-ஆம் தேதித் தலைநகர் ராஜா லாவூட் சாலையில்
நடந்த 'தங்காப் நஜிப்' அமைதிப் போராட்டம் 400-பேருக்கும் குறைவான ஆட்கள் என்றாலும் பெரிய அளவில் மலேசிய மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
போலீஸ் இந்தப் போராட்டத்தை நடத்துக்கூடாது என்று எச்சரித்தது. இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகக் கூறியிருந்த அடாம் அட்லியை விசாரிப்பதற்காக டாங் வாங்கிப் போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அடாம் அலியுடன் லென்சாக் கம்முனிகேசன்ஸ் அதிகாரிச் சுக்ரியும் சென்றிருந்தார். முன்னதாக இந்த விசாரனையின்போது கைது செய்ய மாட்டார்கள் என்று கூறப்பட்டிருந்த வேளையில், விசாரனை முடிந்து வெளியில் வரும்போது இருவரும் கைதுச் செய்யப்பட்டனர்.போலீசின் இந்தச் செய்கையானது மாணவர் சமூகத்தைக் கிளர்ச்சியடையச் செய்தது என்றுதான் கூற வேண்டும். அமைதிப் போராட்டத்தை நடத்தியே தீருவோம் என்று எழுந்த மாணவ சக்தி, சனிக்கிழமை ஒரு மணியளவில் சோகோ பேராங்காடி முன்பு ஒன்று கூடத் தொடங்கினர். அதே வேளையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்களும், சாலைப் போக்குவரத்துப் போலீஸ்க்காரர்களும், ஊடகவியலாளர்களும் அந்தச் சாலையை முற்றுகையிட்டிருந்தனர்.
அதன் பிறகே அங்குச் சலசலப்பு மூண்டது. மக்கள் 'தங்காப் நஜிப்' என்ற கோஷத்தை எழுப்பினர். கோஷத்தை எழுப்பியவர்களும் கைதுச் செய்யப்பட்டனர். ஒருவர் ஆபத்தானப் பட்டாசைக் கொழுத்திப் போட நிலமை இன்னும் மோசமானது. கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் நடந்துக்கொண்ட அனைவரையும் போலீஸ், கைதுச் செய்தது. ஆனால், கூட்டம் கலைவதாகத் தெரியவில்லை. 100-க்கும் மேற்பட்ட போலீஸ் அந்த மக்களை அல்லது இளைஞர்களைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லையோ என்னவோ தெரியவில்லை மேலும் இரண்டு பஸ்களில் போலீஸ்காரர்கள் வரவழைக்கப்பட்டுக் குவிக்கப்பட்டனர். அங்கிருந்த மக்களைக் கலைந்து போகச் செய்யும்படி இந்தப் போலீஸ்காரர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. அவர்கள் செயலில் இறங்கினர். மாலை 4 மணியளவில் அந்தச் சாலையில் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, வாகன நடமாட்டத்திற்குத் திறந்துவிடப்பட்டது.

போராட்டமே நடக்காமல், ஒரு பயங்கரப் போராட்டம் போலீஸ்காரர்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு சம்பவம் இது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. மலேசிய பிரதமர் நஜிப் எதிர்கொண்டிருக்கும் 1எம்டிபி ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும், அதிகாரத் துஷ்பிரயோகங்களுக்கும் பொறுப்பேற்று, அவர் பதவியைத் துறக்க வேண்டும் என்று வழியுறுத்தும் பேரணிதான் இந்த ‘தங்காப் நஜிப்’ (நஜிப்பைக் கைதுசெய்யுங்கள்) பேரணி என அடையாளப்படுத்தப்படுகிறது. அதே வேளையில், இதன் தொடர்ச்சியாகப் பெர்சே அமைப்பு மற்றும் ஒரு போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது.
-யோகி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக