செவ்வாய், 7 ஜூலை, 2015

அவனின் குரல்

அவன் அங்குதான் இருந்தான்
அவனின் குரல்
மெல்லியதாகக் கேட்டது
அவன் என்னிடம்தான் பேசினான்
யாருக்கும் புலப்படாத அவனை
என் கண்கள் கண்டுவிட்டதாகச் சொன்னான்
பனி பொழிவதாகவும்
உஷ்ணத்தில் வெந்து தணிவதாகவும்
முயல் இறைச்சியில் இனிப்பு கூடியுள்ளதாகவும்
பெருமாள் சிலையில்
வதனங்கள் மின்னுவதாகவும்
வனம் முழுக்க
ஊதா மலர்கள் மலர்ந்துள்ளதாகவும்
சாம்பல் பறவையாக
அவனே திரிவதாகவும்
கூறிக்கொண்டிருந்தான்
சாம்பல் பறவை உதிர்த்த
இறகு ஒன்று
இன்று
சொல்லிவிட்டுச் சென்றது
அவனின்
கடந்த கால துன்பியலை

-ஏப்ரல் 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக