செவ்வாய், 7 ஜூலை, 2015புதிய  புத்தகத்தை
திறந்திருக்கிறேன்
புத்தா...
இறுதி பக்கத்தின்
கடைசி வரி என
முதல் பக்கத்தில்
எழுதியுள்ளது
அந்த வரியோடு
புத்தகம் முடிகிறது...

ஜூன் 2015


000

காதலால்
நிரப்பிக் கொண்டிருக்கிறேன்
கோப்பைதான்
அடங்க
மறுக்கிறது-நவம்பர் 2014

000

காற்று வெளியில்
அலைந்து திரிகிறேன்
காதலாவது ஏன் என்று கேட்டிருக்கலாம்?

-நவம்பர் 2014

000

தேவைதைகள்
கண் விழிப்பதில்லை
சாத்தான்கள்
தூங்குவதே இல்லை!

-ஜூன் 2013

000

சாத்தான்கள் கூட்டத்தில்
தேவதைகள் அமைதியாக 
இருப்பதால்
தேவதைகளுக்கு சக்தி இல்லை
என்ற அர்த்தமில்லை
தேவதைகள் என்றும் தேவதைகள்தான்
சாத்தான்கள் எப்போதும்
சத்தான்கள்தான்

-ஜூன் 2013
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக