ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

ஷகி

(ஒரே கவிதை இரண்டு வடிவங்கள்)


ஷகி 1

பசுமை மாறா வதனத்தோடு
நான் வளர்த்துக்கொண்டிருக்கும்...
Devil's ivy -படர் தாவரம்

சலசலத்து நெஞ்சோடு
கிளத்தலுக்காகவே
நாள்தவறாமல் ஏந்திக்கொள்கிறேன்.

அலங்காரத்திற்காவோ, வெற்றிடத்தை நிரப்பவோ
வாங்கி வரும்போது
இத்தனை மேன்மையாகக் கொள்ளவில்லை...

சுவர் பற்றி
எனது அறை இருக்கும்
திசை நோக்கியதன் பயணத்தில்
ஒலிக்கிறது மந்திரச் சொல்கட்டு

ஓர் அர்த்த ஜாம நேரத்தில்
ஷகி என தாய்மையோடு பெயரிட...
அதன் பைசாசம் மாயமானது

மூன்று வாரங்கள்
மிகுந்த ஆசையும், பாதுகாப்போடும் போஷிக்க
என்னில் விதையவிழ்ந்தாள் ஷகி.

மிகப் பிடிவாதமாக என்னைக் கிழித்துக்கொண்டு
வெளிவந்த என் ஷகியை
பிரபஞ்ச வெளியைக் காட்டாமல் Devil's ivy-யின்
ஆத்மாவோடு சேர்த்துவிட்டேன்

அதிகமாய் நீறூற்றும்போதெல்லாம்
இலைகளின் வழியே
என் கண்ணீரை இறைத்து
கிளைகிளையாக வளரும் ஷகி
என்னைக் கண்டும் காணாமலும் சிரிக்கிறாள்...



SHAKI

Devil's Ivy
the creeper
that I nurture
with a evergreen body.

Only for setting
the heart fluttering
do I hold it daily
without failing.

It did not seem to be
that important to me
when bought as a decoration
or to fill up an empty station.
Clinging to the wall
on its travel
in the direction of my room
reverberates a magic spell.

On naming it "Shaki"
with motherly fervour
one midnight hour,
its ghoulishness vanished.

Nurtured for three weeks with
so much affection
and protection
Shaki germinated in me.

Without exposing to Milky Way Galaxy
I united Shaki
who very adamantly
tore her way out of me
with the soul of the Devil's Ivy.

Sending my tears
scattered through her leaves whenever
watered in excess,
sprouting branches and growing,
Shaki smiles as though
she does or not notice me.


 

ஷகி 2

நான் வளர்க்கும் Devils Ivy- படர் தாவரம்
சூரியனுக்கெதிராய் நிர்வாணமாய்
விழித்தெழ
அதன் சிறு கிளைகளைத்
திறக்கிறது ஒளித்தூசு

அலங்காரத்திற்காவோ, வெற்றிடத்தை நிரப்பவோ
வாங்கி வரும்போது
இத்தனை மேன்மையாகக் கொள்ளவில்லை...
சலசலத்து நெஞ்சோடு
கிளத்தலுக்காகவே
நாள்தவறாமல் ஏந்திக்கொள்கிறேன்.

சுவர் பற்றி
எனது அறை இருக்கும்
திசை நோக்கிய அதன் பயணத்தில்
ஒலிக்கிறது மந்திரச் சொல்கட்டு

ஓர் அர்த்த ஜாம நேரத்தில்
ஷகி என தாய்மையோடு பெயரிட
அதன் பைசாசம் மாயமானது

நீடிக்காத நாளின் சோகம்
கிளைக்கும் வெப்பமாக
மஞ்சள் கிரீம் புள்ளிகளோடு
தடையற்ற மகரந்தச் சேர்க்கைக்கு
பரிணாமம் உள்ளது தயாராக ....



SHAKI_2

When the Devil's Ivy creeper
that I nurture
wakes up naked
in front of the Sun,
light particles
open its tiny branches.

It did not seem to be
that important to me
when bought as a decoration
or to fill up an empty station.

Only for setting
the heart fluttering
do I hold it daily
without failing.

Clinging to the wall
on its travel
in the direction of my room
reverberates a magic spell.

On naming it "Shaki"
with motherly fervour
one midnight hour,
its ghoulishness vanished.

Grief of the day that did not last
sprouting as heat,
with yellowish cream spots
a dimension
is ready for unimpeded pollination.

(ஆங்கில மொழிபெயர்ப்பு

~Shaki's Grandpa 1155 :: 22022020 :: Noida)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக