
நேப்பாள் embassy, Wisma Paradise, No. 63, Jalan Ampang, 50450 Kuala Lumpur, Wilayah Persekutuan Kuala Lumpur என்ற முகவரியில் இருக்கிறது. இன்னும் தெளிவாக சொன்னால் மஸ்ஜித் ஜாமெக்கில் இருக்கும் ABC restaurant அருகில் இருக்கும் பாலத்தில் ஏறி இறங்கினால் Wisma Paradise கண்ணுக்குத் தெரியும். நிறைய நேப்பாள் சம்பந்தப்படட அலுவலகங்களை அங்கு காணலாம். நேப்பாள் நாட்டுப் பணம் மாற்றுவதாக இருந்தாலும் அங்கு மாற்றிக்கொள்ளலாம்.

குறிப்பிட்ட நேரத்தை நாம் தவறாமல் பின்பற்றி சென்றாலும் அங்கிருக்கும் அதிகாரிகள் 10 மணிக்குத்தான் வருகிறார்கள். காவலதிகாரி 9.30-க்கு கடையை திறந்து விடுவார்கள் என கூறி என்னை காக்க வைத்து பின் வாங்கிக் கட்டிக்கொண்டது வேறு கதை.


நாம் தயாராக வைத்திருக்க வேண்டியவை .
1. பாஸ்போர்ட் நகல்
2. ஒரு புகைப்படம்
3. அசல் பாஸ்போர்ட்
4. ரொக்கம்
பாரத்தை அங்குதான் தருகிறார்கள். (முதல்நாளே நான் என்னென்ன கொண்டு வரவேண்டும் என அங்கு சென்று கேட்டிருந்தேன். அப்போதே கூட கொடுத்திருக்கலாம். சிஸ்தத்தில் அப்படி இல்லாமல் இருக்கலாம்.)

எந்த ஒரு ரசீதையும் விசா கையில் வரும்வரை தொலைத்துவிடாதீர்கள். ஒரு cover போட்டு வைத்திருப்பது நல்லது. விசா பெறும்போது பணம் கட்டிய ரசீதை கையில் கொண்டு போனால்தான் விசா கொடுப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக