செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

தாய் தந்தை குரு பறை

எப்போதும் சுற்றுப்பயணியாகவும் நண்பர்களை சந்திக்கவும் தமிழ்நாட்டுக்கு வந்துப்போகும் நான் இம்முறை இரண்டு காரணங்களுக்காக வரவேண்டியிருந்தது. முதலாவதாக எனது மூன்றாவது புத்தகத்தை சென்னை புத்தக சந்தையில் பார்ப்பதற்காகவும் பெறுவதற்காகவும்.
இரண்டாவது காரணம் பறை இசையை பயில்வதற்காக..
சில மாதங்களுக்கு முன்பு நான் பறையிசை பயில விரும்புகிறேன், என்று நண்பர் ஷாகுலிடம் சொன்னதும், அவர் முகநூலில் ஒரு பதிவு போட்டு, ஆசானை தேர்ந்தெடுத்தது மட்டுமல்லாமல் அவரும் பறையிசையை சேர்ந்தே பழகலாம் என்றார்.
சென்னையை சேர்ந்த 'புத்தர் கலைகுழு' மணிமாறன் அண்ணனிடம் அவரின் நேரடி பயிற்சியின் கீழ், வேடந்தாங்களில் 4 நாட்கள் பயிற்சியை மேற்கொண்டோம்.
சிறுவயதிலிருந்தே வீணையை மீட்ட கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை எப்படி பறையின் மீது திரும்பியது என்றே தெரியவில்லை. ஆர்வக்கோளாறு என்றெல்லாம் அதை கொச்சைபடுத்திட முடியாது. இத்தனைக்கும் என் சொந்தத்தில் சகோதரர்கள் புகழ்பெற்ற உறுமிமேளக் கலைஞர்களாக இருந்தபோதும், சிறுவயதிலிருந்தே அவர்கள் பயிற்சி எடுக்கும்போது உடன் இருந்தபோதிலும் அவற்றை இசைத்துப் பார்க்க விரும்பியதில்லை.
பறை பழகப்போகிறேன் என்று சொன்னதும், எழுந்த எதிர்வினைகள் அதிகம். ஏன் எழுந்தது? அதை எப்படி சமாளித்தேன் என்பதை படைப்பாக சொல்வதில்தான் சுவாரஷ்யம் இருக்கிறது.
என் பறையிசைப் பயிற்சியில் அண்ணன் மணிமாறன் முதன் முதலில் சொல்லிக்கொடுத்த பாடம்
"தாய் தந்தை குரு பறை"
கற்ற முதல் அடியின் சொற்கட்டு, அணியம் இந்தா...
த கு கூ தா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக