நாங்கள் வாழ்ந்தது ஓர் அழகிய பூமியில்
அண்ணாந்து பார்த்தால் அழகிய நீல வானம்
திரும்பிய பக்கமெல்லாம் எழில் கொஞ்சும் இயற்கை
எத்தனை அழகு தெரியுமா எங்களின் ஊர் ?
எத்தனை அன்புகொண்டது தெரியுமா
எங்களின் சுற்றம்?
நான் சொல்வது உங்களுக்கு விசித்திரமாக இருக்கிறதா?
எல்லா இடத்திலும் ஒன்றுபோலதானே இருக்கிறது என்று
நீங்கள் நகைப்புக்கிடையில் கூறுவது எனக்குக் கேட்கிறது…
நண்பர்களே!
அப்படியல்ல எங்களின் நிலை…
எங்களின் வாழ்க்கை உங்களைப்போல அல்ல..
நாங்கள் எங்கள் பூமியிலிருந்து துரத்தியடிக்கப்பட்டவர்கள்
நாங்கள் போரில் வானத்தைப் பார்த்துக்கொண்டே
தட்டுப்பட்ட ஒரு நாட்டில் கள்ளத்தனமாக தஞ்சம் புகுந்தவர்கள்
இயற்கைகொடுக்கும் அத்தனையும் எங்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது
எங்கள் ஊர்
எங்கள் சுற்றம்
அனைத்தும் இனி எங்களின்
நினைவுகளில் மட்டுமே இருக்கப்போகிறது…
நண்பர்களே!
அறிவீர்களா?
சொந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட நாங்கள்
கடலில் தோணியில் வந்துக்கொண்டிருந்தோம்
எங்களில் பாதிப்பேர் கடலுக்கே இரையானோம்
மீதிப் பேருக்கு இடம் இல்லை என
இந்த பூமியைச் சொந்தம் கொண்டாடும் நாடுகள் மறுத்தன
நண்பர்களே உங்களுக்கு இன்னொன்றும் தெரியுமா?
எங்களை அகதியாக அனுமதித்த நாடுகளில்
எங்களுக்குக் கிடைக்கும் மரியாதை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
எங்களின் வாழ்க்கை உங்களுக்கெல்லாம்
வரவே கூடாது
உங்களின் தாய்நாட்டில் அடைக்கலம் கொண்டிருக்கும் நாங்கள்
உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்..
எங்களுக்கு அது தெரியும்
உங்களுக்கு எங்களைப் பிடிக்கவில்லை
எங்கள் மீது சகிக்க முடியாத மணம் வீசுகிறது;
நாங்கள் தூய்மையாக இல்லை;
நாங்கள் தீவிரவாதிகள்;
நாங்கள் நாகரீகமற்றவர்கள்:
நீங்கள் சொல்லும் இந்த வார்த்தைகளிலிருந்து
நாங்கள் புரிந்துக்கொள்கிறோம்
உங்களுக்கு எங்களைப் பிடிக்கவில்லை என்பதை…
நண்பர்களே!
இந்த பூமியையும்
வானத்தையும்
இயற்கையையும்
விரும்பும் நீங்கள்
அகதிகளான
எங்களை வெறுப்பது எதனால்?
மனிதர்களாக மனிதம் கொண்டு
ஒரு முறை
ஒரே முறை பாருங்களேன்
எங்களின் சுற்றமாக
நீங்களே அங்கு இருப்பீர்கள்
- யோகி 2020
We lived on a beautiful land.
If you looked up, there was a beautiful blue sky.
Whichever direction you turned, there was beautiful nature.
Do you know how beautiful was our town?
Do you know how lovely our surroundings were?
Does what I say
sound strange to you?
I can hear you
say amidst laughter
that it is just the same
everywhere.
Friends!
Our status
is not so.
Our lives
are not like yours.
From our land,
we have been driven away.
Looking at the sky
during the war,
we took refuge illegally
in a country we sighted.
Everything provided by nature
has been denied to us.
Hereafter,
our town and
our surroundings
are all going to be
in our memories only.
Do you know friends?
Driven away from
our own land,
we were coming
by the sea
in sailboats.
Half of us fell
prey to the sea itself.
To those who were leftover,
countries that claim
ownership of this land
refused any space.
Do you know
one more thing too friends?
Do you know
what is the respect that we get
in the countries which have
permitted us as refugees?
All of you
should never have to
live like us.
Having taken asylum
in your motherland,
we are duty bound to express
our gratefulness to you.
We know that
you do not like us.
An unbearable smell
emanates from us;
we are not clean,
we are extremists and
we are uncivilized.
From these words that you say,
we understand that
you do not like us.
Friends!
Why do you
who love this land,
sky and nature
hate us who are refugees?
Look at us
humanely
just only once
as humans.
Only you would be therein
as our kith and kin.
~Sri 1118 :: 04072020 :: Noida
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக