அகோரிகளை இங்கு எங்கு காணலாம் என தமிழ் பேசத்தெரிந்த ஒரு சாமியாடியிடம் கேட்டேன். கங்கை படித்துறையில் தற்காலிக குடில்மாதிரி ஒன்று அமைத்துக்கொண்டு அவர், அவர் மனைவி மற்றும் பிள்ளைகளோடு கடலையை சுட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
என்னையும் அவர்களுக்கருகில் அமர்ந்துகொள்ளுமாறு அவரின் மனைவி அழைத்தார். சாகுலைப் பார்த்தேன், அவர் மும்முரமாக காசிநகரை புகைபடமெடுத்துக்கொண்டு தொலைவில் இருந்தார். அவரை தொந்தரவு செய்யாமல் நான் இவர்களோடு பேசலாம் என மெல்ல பேச்சு கொடுத்தேன்.
...
சின்ன நெருப்பிலிருந்து வெளிப்பட்டுக்கொண்டிருந்த உஷ்ணம் அந்நேரத்திற்கு இதமாக இருந்தது. நான் கொஞ்சம் தயங்கினேன். அதெல்லாம் பயப்பட வேணாம் என்று அருகில் அமரவைத்து இரண்டு மூன்று வறுத்த உடைக்காத கடலையை கையில் கொடுத்தார்கள். எந்த சங்கோஜமும் ஏற்படவில்லை எனக்கு. விருந்தாளிகளை உபசரிப்பதும் நமது பண்பாடல்லவா. கடலையை உடைத்து வாயில் போட்டுக்கொண்டேன். சாமியாடி பேச தொடங்கினார். அகோரிகளைக் காண வேண்டுமா? அகோரிகளை உங்களால் அடையாளம் காண முடியுமா? அதுவும் காசியில் அது சாத்தியம் என நினைக்கிறீர்களா என அடுக்கடுக்காக வெறும் கேள்விகளை மட்டுமே கேட்டார் ? அதற்குள் என்னை தேடிக்கொண்டு சாகுலும் வந்து சேர்ந்தார். அகோரிகள் மிகச் சாதரணமாக மக்களோடு மக்களாகதான் இருக்கிறார்கள் என அவர் விளக்கம் சொன்னார். அகோரிகளை காண்பதற்கென்றே உள்ள அந்த நாளில் முடிந்தால் வாங்க என்று அவர் விடைகொடுதார்.
ஆனாலும், ஜென்மனியிலிருந்து 10 ஆண்டுகள் எங்கெங்கோ சுற்றி இறுதியில் சிவன்-பார்வதி சகிதமாக காசியில் டேராப்போட்டுவிட்ட அந்த ஜோடிகள் எனக்கு அகோரிகளாகவே தெரிந்தார்கள். ஒருவர் பக்தி சகிதமாக கஞ்சாவை குழாயில் அடைத்து தர லாவகமாக அதை ஊதிதள்ளுகிறார் ஜெர்மன் சிவன். வெள்ளைக்காரன் பொய் சொல்ல மாட்டான் என்பதைபோல அவரிடம் பலர் ஆசி வாங்கிறார்கள்.
தலைக்கீழாக நின்று யோகாவெல்லாம் செய்து காட்டினார். பக்தர்களுக்கு ஆசி வழங்கியே அலுத்து போகிறார் நம்ம ஜெர்மன் பார்வதி. நான் பத்திரிகையிலிருந்து வந்திருக்கிறேன். உங்கள் இமெயில் முகவரி தாங்க என சிவனிடம் கேட்க ரோஸ் என தொடக்க பெயராக இணைய முகவரி தந்தார். ரோஸ் இந்தியாவின் தேசிய மலர் என்றேன். i know my dear என்றார் MR.ROS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக