பெண்களை ஒருங்கிணைப்பது என்பது சுலபமான காரியமா எனக்கெடடால், அது எளிமையாக நடக்க கூடிய விஷயமில்லை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. தமக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடமைகள் பொறுப்புகள் தாண்டி பணிக்கும் போய்வந்து ஓய்வாக இருக்கப்போகும் ஒரு நாளிலும் முழுக்க அவர்களுக்கான நேரம் கிடைக்காமலே இருக்கும். இதற்கிடையில் பெண்கள் சந்திப்பு வைக்கிறோம் கலந்து பேசுவோம் என அழைத்தால், அது நடக்கும் காரியமா என்ன?
பெண்களே ஏற்பாடு செய்து, பெண்களே ஒருங்கிணைத்து, அவர்களே பயணித்து , வழிநடத்தி, நிகழ்ச்சியில் பங்குபெற்று அதிலிருக்கும் குறை நிறைகளை பொதுவில் வைக்கும் ஒரு நிகழ்வாக ஊடறு பெண்கள் சந்திப்பு இருக்கிறது. பன்னாட்டு ரீதியில் நான்காவது ஆண்டாக இந்தியாவின் பெருநகரங்களில் ஒன்றான பம்பாயில் இவ்வருடத்திற்கான சந்திப்பை ஊடறு வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. அதுவும் 5 நாடுகளைச் சேர்ந்த பெண் ஆளுமைகளோடு பம்பாய் பெண்களையும் ஊடறு ஒருங்கிணைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்புக்கான தலைமை பொறுப்பை பம்பாயை சேர்ந்த புதிய மாதவி(மா) ஏற்றிருந்தார். நவம்பர் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிடுந்த இந்தச் சந்திப்பின் ஏற்பாட்டுப் பணிகள் சில மாதங்களுக்கு முன்பே முன்னெடுக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக நிகழ்ச்சியில் பங்கெடுக்கப்போகும் தோழியர்கள், விவாதிக்கப்போகும் தலைப்புகள், இடப்பெறும் அங்கங்கள் என ஒவ்வொன்றும் விவாதத்திற்கு பிறகும் அவ்வங்கம் இடம்பெறுவதற்கான வலுவான காரணம் முன்வைக்கப்பட்ட பிறகும்தான் சந்திப்பில் இடம்பெற தகுதி பெற்றன.
பெண்கள் சந்திப்புக்கு வரும் பெண்கள் தங்குவதற்காக எல்லா வசதிகளும் கொண்ட ஒரு வீடும், எங்களுக்கு மூன்று வேளை சமையல் செய்துக்கொடுக்க ஒரு மஹாராஷ்ட்ரா அம்மாவும், வீட்டு வேலைகளுக்கு உதவியாக மேரி என்ற பெண்ணும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார்கள். அவர்களும் பெண்கள் சந்திப்பின் ஒரு அங்கமாகவே திகழ்ந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பம்பாயின் பாண்டூப் ஈஸ்ட் பல்வேறு நாடு மற்றும் கலாச்சாரங்கள் கொண்ட பெண்களோடு பம்பாய் பெண்களையும் இணைத்து அழகுப்பார்த்துக் கொண்டிருந்தது.
(தொடரும் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக