port dickson beach |
என் வாழ்க்கையை
உனக்கு இளைப்பாறத் தர சொல்கிறது
போர்ட் டிக்சன் கடற்கரை
மஞ்சள் மீன்கள்
கருப்பு நிலா
ஊதா பறவைகள்
நீல நாரைகள்
வெள்ளை கடற்பாசிகள்
பச்சை நீர் மலர்கள்
இன்னும்
இத்தியாதி இத்யாதிகள்
எதுவும் அறியாது
சிப்பிக்குள் மறைத்து
வைத்திருக்கும்
தணியாத அவன் காதலை
கால் முளைத்து
நண்டு போல நீண்ட கொடுக்கு முளைத்து
கொட்டிக்கொண்டே இருக்கும்
அவனின் திருவாய் வார்த்தைகளும் அறியாது
சிவந்திருக்கும் கடல் தண்ணீரை
காதலின் கடைசி காதலி
நான் ஒருவள்தான்
பிரபஞ்ச மொத்த
அழகையும் ஊற்றி
ஓர் உயிராக தரித்தெழுந்தவள் நான்
ஆதமின் ஏவாளும்
கலீல் ஜிப்ரானின் செல்மாவும்கூட நானேதான்
சிப்பிக்குள்ளேயே அடங்கியிருக்கும்
காதலன்
அவனின் தணியாத காதல்
இது எதையும் அறிந்திருக்கவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக