ஆய்வுக் கட்டுரை: ஆதியில் யானைகள் இருந்தன..
ஆசிரியர்: கோவை சதாசிவம்
வெளியீடு : தடாகம் பதிப்பகம்
யானைகளை நேரில் காணும்போது மனம் எத்தனை துள்ளாட்டம் போடுகிறது? மலேசியாவில் மிருகக்காட்சி சாலையில் சும்மா பேருக்கு இருக்கும் இரண்டு யானைகளைத் தவிர வனங்களில் யானைகளைக் கண்டதில்லை. அல்லது அம்மாதிரியான வனங்களுக்கு நான் இன்னும் போகவில்லை.
இங்கே யானைகள் சரணாலயம் இருந்தும் எல்லாம் பழக்கப்படுத்தப்பட்ட யானைகள்தான் இருக்கிறது. சுதந்திரமாக திரிவதை காணவியலாது. ஆனாம், கிளந்தான் உள்ளிட்ட அடர்ந்த வனங்களில் யானைகள் இருக்கலாம். நான் இன்னும் சென்றதில்லை.
எனது இந்தியப்பயணத்தில் சலிப்பின்றி யானைகளைக் கண்டு களித்திருக்கிறேன். அதற்கு முன்பே யானைகளைக் குறித்து வாசிக்கும்போதும் அதுக்குறித்தான புத்தகங்களை வாங்கும்போதும் யானைகள் குறித்துத் தெரிந்துக்கொள்ள மனம் விரும்புவதற்கான காரணம் தெரியவில்லை.
அண்மையில் சென்னை டிஸ்கவரி புக் பேலசில் வாங்கிய புத்தகம் 'ஆதியில் யானைகள் இருந்தன'. ஒரு மணி நேரத்தில் புத்தகத்தை வாசித்து முடித்து விடலாம். பத்தகம் ஓர் ஆய்வுக்கட்டுரையாக இருப்பதால் பல சுவாரஸ்யமான விஷயங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது. கோவை சதாசிவம் இந்தக் புத்தகத்தை எழுதியிருக்கிறார். தடாகம் பதிப்பகம் வெளியீடு செய்துள்ளது. பல சங்ககாலக் குறிப்புகளை மேற்கோள் காட்டி அத்தனை சுவாரஸ்யங்களைக் கூட்டியுள்ளார் சதாசிவம்.
பதிவின் ஓரிடத்தில் 'உலகில் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் இரண்டு யானைகள் பலவந்தமா கொல்லப்படுகின்றன. இன்னும் 11 ஆண்டுகளில் உலகிலுள்ள அனைத்து யானைகளும் அழிந்து விடும் என்று சதாசிவம் கூறுகிறார். நினைத்துபார்க்க முடியாத விடயம் இது.
இந்தப் புத்தகத்தில் இரண்டு சம்பவங்களைக் கதைகள் பாணியில் சொல்லியிருக்கிறார் சதாசிவம். அதில் ஒரு கதை 2014-ல் கேரலத்தில் நடந்தது.
திருவிழாவிற்காகக் கொடிக்கம்பம் நட ஆழமான குழி வெட்டப்பட்டுள்ளது. 20 ஆட்கள் சேர்ந்து தூக்கினாலும் தூக்கமுடியாத கொடிகம்பம் அது. யானை பாகன் உத்தரவு படி கொடிகம்பத்தைத் தூக்கி வருகிறது யானை. குழிக்கு அருகில் வந்ததும் கொடி கம்பத்தைத் தூக்கி எறிந்துவிட்டுப் பின் வாங்குகிறது. யானையை இம்சித்து வற்புறுத்துகிறான் யானை பாகன். யானை கம்பத்தைத் தூக்குவதும் எரிவதுமாக இருக்கிறது. பத்தர்கள் யானையை ஏசுகின்றனர். யோசித்த ஒருவர் குழியில் போய்ப் பார்க்கிறார். உள்ளே ஒரு பூனைக்குட்டி கத்துவதற்குகூடத் திராணியற்று சுருண்டு கிடக்கிறது. பூனைக்குட்டியை எடுத்துவிட்டதும், பாகனின் உத்தரவிற்குக் காத்திருக்காமல் கொடி கம்பத்தை நட்டுவிடுகிறது யானை....
இதேபோல காட்சி விஜயகாந்த் நடித்த கள்ளழகர் திரைப்படத்தில் இருப்பது இங்கு குறிப்பிடதக்கது.
இன்னுமொரு சம்பவத்தில்..
வனத்தில் இருந்த ஒரு வீட்டை யானை உடைத்ததாகவும், பின் கை குழந்தை ஒன்று தொட்டிலில் அழுதுக்கொண்டிருந்ததாகவும், பின் அதை வெளியில் தூக்கி வந்ததாகவும் சொல்லியிருந்தார். தன்னால் அந்தக் குழந்தைக்கு ஆபத்து இல்லை என்று மகிழ்ச்சியில் குழந்தையை பாதுகாப்பாக விட்டு விட்டு சந்தோஷமுடன் அங்கிருந்து சென்றதாக சதாசிவம் பதிவு செய்திருக்கிறார்.
அந்தச் சம்பவம் எங்கு நடந்தது என சதாசிவத்திடம் கேட்கையில்
முதுமலை அருகில் உள்ள ஒரு மலை கிராமத்தில் நடந்த சம்பவத்தை யானை ஆய்வாளர் ஒருவர் இந்து பத்திரிக்கையில் பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
சங்க காலங்களில் யானைகளை போருக்கு பயன்படுத்தும் போது அதற்கு போர் பயிற்சிகளை மட்டும் கொடுப்பதில்லை. போருக்கு செல்வதற்கு முன் வயிறு முட்ட கள்ளையும் கொடுத்து சினமூட்டி அனுப்புவார்களாம்.
மனிதர்களுக்கு அடுத்தபடியாக அறிவிற் சிறந்தவையாக கருதப்படும் யானைகளை இந்த வேந்தர்கள் ஆயிரமாயிரமாக கொன்று குவித்து தங்களின் வெற்றிகளை கொண்டாடி தீர்த்துள்ளனர்.
தன்னை தாக்கிய அனுபவத்தை தன் கைப்பட 'சுதேசமித்திர' இதழில் பதிவு செய்தவர் எம் பாரதி. ' எல்லா உயிர்களும் இன்பம் எய்துக' என்று பாடினார் அவர்.

இந்தப் புத்தகத்தில் யானைகள் குறித்த புரிதல்களையும் மனிதனுக்கும் யானைக்கும் உள்ள ஆதியில் இருந்து தொடர்ந்து வரும் தொடர்பையும் மிக எளிமையாக பேசுகிறார் ஆசிரியர். யானையை அறுகு, எறும்பி, மறமலி, வாணரம் என 170 பெயர்கள் இருக்கிறது என்பதையும் பதிவு செய்திருக்கிறார் அவர்.
சங்க காலங்களில் யானைகளை போருக்கு பயன்படுத்தும் போது அதற்கு போர் பயிற்சிகளை மட்டும் கொடுப்பதில்லை. போருக்கு செல்வதற்கு முன் வயிறு முட்ட கள்ளையும் கொடுத்து சினமூட்டி அனுப்புவார்களாம்.
மனிதர்களுக்கு அடுத்தபடியாக அறிவிற் சிறந்தவையாக கருதப்படும் யானைகளை இந்த வேந்தர்கள் ஆயிரமாயிரமாக கொன்று குவித்து தங்களின் வெற்றிகளை கொண்டாடி தீர்த்துள்ளனர்.
தன்னை தாக்கிய அனுபவத்தை தன் கைப்பட 'சுதேசமித்திர' இதழில் பதிவு செய்தவர் எம் பாரதி. ' எல்லா உயிர்களும் இன்பம் எய்துக' என்று பாடினார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக