சனி, 30 ஜனவரி, 2021

மலேசிய பிரதமர்கள்


1957-ஆம் ஆண்டிலிருந்து மலேசியா மண் சுதந்திரக் காற்றை சுவாசித்துக்கொண்டிருக்கிறது.   அப்போதிலிருந்து  8 பிரதமர்களின் நிர்வாகத்தை  மலேசிய மக்கள்  பார்த்திருக்கின்றனர்.  அதில் மகாதீர் மட்டும் 22 ஆண்டுகள் தொடர்ச்சியாக பிரதமராக இருந்தார்.  அதோடு மலேசியாவில் பிரதமராக இருந்தவர்களில் இவர் ஒருவரே மீக நீண்ட காலம்  பிரதமர் நாற்காலியை கெட்டியாக பிடித்திருந்திருக்கிறார்.  துங்கு அப்துல் ரஹ்மான் 13 ஆண்கள் மட்டுமே பிரதமராக இருந்தாலும்,  இன்றுவரை அவரின்  நன்மதிப்பு போற்றப்படுகிறது.  மலேசியாவின் அத்தனை பிரதமர்களையும் பார்த்துவிட்ட மூத்த தலைவர்களிடம் உங்கள் மனம் கவர்ந்த பிரதமர் யார் என்று கேட்டால், நிச்சயமாக அனைவரும் சொல்லும் ஒரே பதில் துங்கு என்றுதான்.

ஒரு நாள் முதல்வர்

இதற்கிடையில் 1973-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம். ஒரு நாள் பிரதமராக நம்முடைய துன் வீ.தி.சம்பந்தன் வேறு இருந்தார்.  நாட்டை அப்போது துணைப் பிரதமராக  இருந்த டாக்டர் இஸ்மாயில் பொறுப்பில் விட்டுவிட்டு, துன் அப்துல் ரசாக் கனடாவுக்கு பயணம் போயிருந்தார். அந்த நேரத்தில் துணைப் பிரதமர் காலமானதால், அச்சூழலை எதிர்கொள்ள துன் வீ.தி.சம்பந்தன் ஒரு நாள் முதல்வராக இருந்தார்.  அதன் பிறகு அந்த வாய்ப்பு யாருக்குமே கிடைக்கவில்லை. இனி யாருக்கும் கிடைக்கப் போவதுமில்லை.  துன் சம்பந்தன் ம..கா-வின் தேசியத் தலைவராக 1955 முதல் 1973 வரை,  தொழிலாளர் அமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர், தபால் தந்தித்துறை அமைச்சர், தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் என்ற அரசுப் பொறுப்புகளில் இருபது ஆண்டுகள் சேவை செய்திருக்கிறார்.

நாட்டின் 7-வது பிரதமராக மீண்டும் எதிர்கட்சியின் அணியிலிருந்து பிரதம மந்திரி 2018-ஆம் ஆண்டு  கைப்பற்றினார் துன் டாக்டர் மஹாதீர். சுமார் 63ஆண்டுகள் தேசிய முன்னணி ஆட்சியில் இருந்த பிரதம மந்திரிப் பதவி, முதல் முறையாக எதிர்கட்சி கூட்டணியிடம் வீழ்ந்தது. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளிவிட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகு 7-வது பிரதமராக மீண்டும் அரியணைக்கு வந்தவர்,  இரண்டு ஆண்டுகள் கூட தாக்குபிடிக்க முடியாமல் விலகினார். அதன் பிறகு நடந்த அரசியல் பூசல்களில் ஏகப்பட்ட கேலிகூத்துகள் நடந்தன. முடிவில் 1 மார்ச் 2020 லிருந்து டான்ஶ்ரீ முஹிடின் யாசின் பிரதமராகா இப்போதுவரை இருக்கிறார்.  அவர் பிரதமராக வந்த வேளை, கோவிட் காலகட்டமாக இருப்பதால் உண்மையில் முஹிடினின் அரசியல் நிலைப்பாட்டை சரியாக அனுமானிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. 

இதற்கு முன் இருந்த  பிரதமர்கள் நாட்டிற்கு என்னென்ன செய்தார்கள்... பார்ப்போம்...

1957-1970


                       துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ் (சுதந்திரத் தந்தை)

1962-மலாயா பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தராக தேர்வு பெற்றார்.

உரை: நான் மலேசிய பிரதமராக  இருப்பதற்கு பெருமை அடைகிறேன். எனது சிந்தனையும் , எண்ணமும் மலேசிய சமூகத்தை மேம்பாடு அடையச் செய்வதுதான்.

1970-1976

                              துன் அப்துல் ரசாக் ஹூசேன் (மேம்பாட்டுத் தந்தை)

1971-முதல் மலேசிய பொருளாதாரத் திட்டம்

1973- தேசிய முன்னணி உருவாக்கம்

உரை: இனங்களிடையே மேம்பாட்டை ஒருமுகமாக்குவதுடன் முன்னேற்றகரமான ஒரு நாட்டை உருவாக்க வேண்டும்.

 

1976-1981

                             துன் ஹுசேன் ஓன் (ஒற்றுமையின் தந்தை)

உரை: நமது வெற்றி ஒற்றுமையின் வழி உருவாக்கப்பட்டது.  பல்லின மக்களின் ஒற்றுமை  புதிய சமுதாய மாற்றத்திற்கு பலமான அடித்தளமாகும். தனிப்பட்ட எந்த இனத்தையும் தேசிய நீரோட்டத்தில் விட்டுவிட முடியாது.

 

1981-2003

                       துன் டாக்டர் மகாதீர் முகமட் (நவீனத்தின் தந்தை)

1970- கல்வியமைச்சர்

1981- தேசிய யூனிட் டிரஸ்ட் திட்டம்,    புரோட்டன் ரக வாகனம் உதயம்

2003- அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகம்

1999- புத்ராஜெயா

1995- ஒற்றைக் கோபுரம்

-1998- இரட்டைக் கோபுரம்

2020 தூரநோக்குத் திட்டம்

உரை: மலேசியா நமது நாடு. நாம் இங்குதான் பிறந்தோம். இந்த நாட்டை மேம்படச் செய்ய நாம் தான் முனைய வேண்டும். ஒரு நாடு வெற்றி தோல்வி அடைவதற்கு நாம் தான் காரணம். வெற்றியை நோக்கிய பயணம் நம்முடையதாக இருக்கட்டும். அதுவே எதிர்கால வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும்.

 

2003-2009

                       துன் அப்துல் அமாட் படாவி (மேம்பாட்டு உருமாற்றத் தந்தை)

2004- மேம்படுத்தப்படுத்தப்பட்ட இஸ்லாமிய கொள்கையான ‘இஸ்லாம் ஹட்ஹாரி’ அறிமுகம்.

உரை: நமது வெற்றி வீட்டிலிருந்து தொடங்கப் படவேண்டும். அதுதான் உண்மையான வெற்றி. வீட்டை நேசிப்பது போல் நாட்டையும் நேசிப்போம். அப்போதுதான் நாம் உண்மையானவர்களாக இருக்க முடியும்.

 

2009-2017

                         டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக் (புத்தாக்கத் தந்தை)

2010- ஒரே மலேசியா கொள்கைத் திட்டம், 

-         அரசாங்கத்தின் உருமாற்றுத் திட்டங்கள்

-         தேசிய முதன்மை செயலாக்கத் திட்டங்கள்  

      உரை:  நாட்டுக்கு பங்கினையாற்றுவோம். மக்களின் நம்பிக்கைதான் நமது பலத்திற்கு அடைப்படை.



1 கருத்து: