தமிழ்நாட்டுப் பயணத்தை நான் 2016- ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறேன். பல்வேறுக் காரணங்களுக்காக என் பயணங்கள் அமைந்திருந்தாலும், ஒவ்வொரு முறையும் நாடு திரும்பும் போது மனநிறைவுடந்தான் திரும்புவேன்.
கடந்த ஆண்டு (2019) ஆகஸ்ட் மாதம் மேற்கொண்ட பயணத்தில் மதுரைக்கு நட்பு ரீதியாக போயிருந்தேன். கவிஞரும் பத்திரிகையாளருமான சோழநாகராஜன் என் நம்பிக்கைக்குறிய நண்பர். அவருடைய வீட்டில் மூன்று நாட்கள் தங்கியிருந்து சமணர்கள் படிகை, மீனாட்சியம்மன் கோயில், அங்குச் செய்யப்படும் இறுதி பூஜை கூடவே சுங்குடி புடவை கொள்முதல் செய்தது என மிக அழகாக இருந்தது அப்பொழுகள்.
இந்த நேர்காணல் அவருடை வீட்டில்தான் பதிவு செய்யப்பட்டது. இணைய செய்தி நிறுவனத்தினர் என்னிடம் கேள்விகள் கேட்கும் பொறுப்பினை சோழநாகராஜனிடமே விட்டிருந்தனர். சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில் அவர் கேட்ட கேள்விகளுக்கு நான் நேர்மையாக பதில் சொல்லியிருக்கிறேன் என்பதில் எனக்கு கொஞ்சம் திருப்தி.
Yellow Lotes TV நிறுவனத்தினர் இரண்டு பாகங்களாக இந்த நேர்க்காணலை வெளியிட்டனர்.
முதல் பாகத்திற்கு
தமிழர்கள் கலாச்சாரத்தை இழக்கிறார்கள் என்ற தலைப்பிலும்
https://www.youtube.com/watch?v=bqmhaE5i-u4 இரண்டாவது பாகத்தை
"நடிகர் ஜீவாவை புகைப்படம் எடுக்க முயற்சித்த போது" என்ற தலைப்பிலும் வெளியிட்டார்கள்.
https://www.youtube.com/watch?v=vW1XvBPEDU4
அவர்களுக்கு நன்றி .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக