ஆகஸ்ட் 31, 2018 மலேசியா தனது- 61 வது ஆண்டு சுதந்திர நிறைவு நாளை அடைந்திருக்கிறது. இதே தேதியில்தான் சபா மாநிலமும் தனது மாநில சுயஆட்சி தினத்தைக் கொண்டாடுகிறது. 1963-ஆம் ஆண்டுக்கு முன்புவரை தீபகற்ப மலேசியாவோடு இணையாமல் இருந்த சபா, அதன்பிறகு ஒன்றிணைந்தது. சரவாக் மற்றும் சிங்கப்பூர், 1963-ஆம் ஆண்டு
ஜூலை 22- ஆம் தேதியோடு தீபகற்ப மலாயாவோடு கைகோர்த்து மலேசிய நாட்டினை வடிவமைத்தன. அதற்குமுன் வரை இந்த மூன்று மாநிலங்களும் சுய ஆட்சி பிரதேசங்களாக செயல்பட்டு வந்தன.
ஆனாலும், சில காரணங்களுக்காக 1965-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை, மலேசியாவின் மாநிலமாக செயல்பட்ட சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து தனிநாடாகச் செயல்பட அனுமதி பெற்றது . மலேசியா ஆகஸ்ட் 31-ஆம் தேதியை சுதந்திர தினமாகவும் செப்டம்பர் 16-ஆம் தேதியை மலேசிய தினமாகவும் கொண்டாடி வருகிறது.
மலேசியாவில் இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட தேசிய தினம் முற்றிலும் வேறுபட்டது. மலேசிய வரலாற்றில் முதல்முறையாக புதிய அரசாங்கத்தின் நிர்வாக சித்தாந்தத்தில் இந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது. (இப்போதிருக்கும் பிரதமர் இதற்கு முன்பும்கூட பிரதமராக இருந்திருந்தாலும் இது மாறுபட்ட சுதந்திர தினம்தான்.)
மலேசியா சுதந்திரம் அடைந்த 61 ஆண்டுகளில், கடந்த மே மாதம் 14-ம் தேதி நடைபெற்ற 14- வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு முதல் தடவையாக, புதிய ஆட்சி மாற்றத்தை நமது நாடு சந்தித்திருக்கிறது. அம்னோ -பாரிசன் நேஷனல் அரசாங்கம் , வாக்குகளை எண்ணும்போது முன்னணியில் இருப்பதாக அறிவிப்பு வந்துகொண்டிருந்தது. (அதுதான் கூட்டணி அமைக்கப்போகிறது என்று நம்பப்பட்டது) இறுதியில் தேர்தல் நடைமுறை விதியின்படி பாரிசன் நேஷனல் அரசாங்கம் தோல்வியை தழுவியது. பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த தேசிய முன்னணி அரசாங்க அதிகாரத்திற்கு எதிராக மலேசியர்கள் நடத்திய போராட்டத்தில் வெற்றி பெற்றனர்.
14- வது பொதுத்தேர்தலுக்குப் பிறகு, மலேசிய மக்கள் புதிய அரசாங்கத்தை வரவேற்றிருந்தாலும் இதில் முரண்பாடாக அமைந்தவர் பிரதமர்தான். துன் மகாதீர் முகமது மலேசிய வரலாற்றில் மிக நீண்டகாலமாகத் தேசிய முன்னணி சாம்ராஜ்ய பிரதமராக இருந்தவர். தனது சொந்த கட்சியில் ஏற்பட்ட முரண்பாடு மற்றும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்குடனான முரண்பாடுகள் காரணமாக அவர் அம்னோவிலிருந்து வெளியேறினார். அதன்பிறகு, கட்சியின் மீதும் அரசின் மீதும் கடுமையான விமர்சனத்தை மகாதீர் வைத்ததின் விளைவு தேசிய முன்னணி அரசாங்கம் வீழ்த்தற்கான காரணங்களில் ஒன்றாக அமைந்தது.
எதிர்க்கட்சியாக இருந்த பக்கத்தான் மற்றும் அதன் உறுப்பு கட்சிகள் மகாதிர் ஒரு
"தேசிய மீட்பாளர்" என்று கொண்டாட தொடங்கினர். பின் பக்கத்தான் கட்சி பக்கத்தான் ஹரப்பானாக
கூட்டு சேர்ந்து இறுதியாக நடந்த பொது தேர்தலில் எதிர்க்கட்சியினர் வெற்றியடைந்தனர். ஆயினும், பக்கத்தான் ஹரப்பான் கட்சி வெற்றி பெற்றதற்கு மகாதீரின் தலைமைத்துவம் மட்டுமே காரணம் எனக் கூறிவிட முடியாது. நஜிப்பின் தலைமையின் கீழ் செயல்பட்ட அம்னோ -பாரிசன் நேஷனல் நிர்வாகம் அதன் நம்பகத்தன்மையை இழந்து, ஆட்சியாளர்களிடையே பிளவை ஏற்படுத்தியிருந்தது. மேலும், அரசின்மீது மக்கள் நடத்திய தொடர் போராட்டங்களினால் உருவாக்கப்பட்ட அரசியல் உத்வேகம், ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த அரசாங்கம் சரிவடைய காரணமாக அமைந்தது.
''அம்னோ''-''பரிசான் நேஷனல்'' வீழ்ச்சியும் ''பக்கத்தான் ஹாரப்பான்'' வெற்றி பெற்று மீண்டும் மகாதீர் பிரதமராக வந்ததும் விசித்திரமான ஒரு நிகழ்வுதான் என்றாலும் சமூக சீர்திருத்தத்திற்கான அரசியல் போராட்ட செயல்பாட்டில் அது முக்கியமான மாற்றமாகும். நஜிப்பின் வீழ்ச்சி மற்றும் மகாதீரின் மறுமலர்ச்சி, அரசாங்க பிரமுகர்கள் வர்க்கத்தை மறுசீரமைப்பதாகக் கருதலாம். அரசின்மீது கிட்டதட்ட நம்பிக்கையை இழந்துவிட்ட பெரும்பான்மையான மக்கள், புதிய அரசினர் அவர்களுக்கான சொந்த வரையறை திட்டங்களை வைத்திருந்தாலும், புதிய மாற்றத்தின் மீது பெரிய அளவில் நம்பிக்கை வைத்தார்கள். அரசியல் மறுகட்டமைப்பிற்கு பிறகு அரசாங்க பிரமுகர்களின் மாற்றமானது கொக்கோ கோலாவும் – பெப்ஸி
கோலா போன்றுதான் இருக்கிறது. அதாவது போத்தலின் வெளியே இருக்கும் விவரங்கள்தான் வெவ்வேறே தவிர அதன் சாராம்சத்தில் எந்த மாற்றமும் இல்லை.
இருப்பினும், அரசியல் மறுசீரமைப்புக்கான ஜனநாயகமாக்கல் மற்றும் சமூக சீர்திருத்தச் செயல்முறையை சரிசெய்யச் சிறிய வெளியை மட்டுமே புதிய அரசாங்கம் திறந்திருக்கிறது. மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் அரசியலில் நீண்ட காலம் அனுபவம் பெற்றிருந்த மகாதீர் மற்றும் டாயிம் சைனுதீன் போன்றவர்கள் முற்போக்கானதாக இருக்கும் சில புதிய கூறுகளை முன்னாள் ராஜ்யத்தின் போது ஆட்சியில் நுழைந்தவர்கள்தான். நெடு நீண்ட காலமாக எதிர்க்கட்சியாக இருந்து அரசியல் மாற்றப் பார்வைகளும் புரட்சிகர இயங்கங்களுக்கு வித்திட்ட தற்போதைய ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலேசியாவின் புதிய அரசியல் கட்டமைப்பை உருவாக்க வழிசெய்ய முடியும். அதன்பொருட்டு அவர்களுடைய மாற்றுச் சிந்தனை முந்தைய ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கை ஒத்தியிருக்குமெனில் அது சரிவை ஏற்படுத்தும்.
ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் சமூக சீர்திருத்தங்களுக்கான வாய்ப்புகள் இருக்கவே செய்தாலும் , எவ்வளவு தூரம் விரிவாக்கக்கூடிய அளவிற்கு அதை நிலைநிறுத்த முடியும் என்பது கேள்விக்குறியானது மட்டுமல்ல நம் அனைவருக்குமே அது சவால் நிறைந்ததும் கூட.
எங்கே மக்களுக்கு அதிகம் சுதந்திரம் வழங்கப்படுகிறதோ அவர்களால் அங்கு அரசியல் செயல்பா டுகளில் அதிகமாகப் பங்கேற்க முடியும். இதனால் நம்பிக்கை கூட்டணி கட்சியின் அரசியல் நிறுவனங்களால் சீர்திருத்தங்களை முன்னெடுக்க முடியும், மேலும் வலுவான ஜனநாயக முறையை உருவாக்க முடியும்.
ஆயினும்,மக்களின் ஆதரவைச் சுலபமாக பெற சில கண்மூடித்தனமான பிரபலமான கொள்கைகளைக் கொண்டுவரும் அரசாங்கத்தால் மக்களிடையே ஜனநாயகத்தை வலுப்படுத்த இயலாது. மக்களுடைய அரசியல் உள்ளுணர்வை உருவாக்குவதற்கு சிவில் சமுதாயத்திற்கும் ஜனநாயகம் சார்புக்கும் ஓர் சவாலாக இருக்கிறது. இந்த முரண்பாடுகள் எதை
உணர்த்துகின்றது என்றால் நாட்டு மக்கள் உண்மையையும் பொய்களையும் பகுத்தாராய்வதுடன் திட்டமிட்டு தைரியமுடன் அரசிடம் கேள்விகளை எழுப்பத் தெரிந்திருக்க வேண்டும் என்பதை .
முந்தைய அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளவாத பொருளாதார திட்டத்தை தற்போதைய அரசாங்கம் இன்னும் வைத்திருந்தால், சமூக-பொருளாதார அடிப்படையில், கீழ்நிலை மக்கள் தொடர்ந்து வாழ்க்கையில் அழுத்தத்தை எதிர்கொள்வதுடன் வாழ்க்கைத் தரத்திலும் பின்னடைவைச் சந்திப்பர். தாராளமயப் பொருளாதாரம்- சந்தை முறை மற்றும் தனியார் துறையும் திறமையான அனைத்தையும் வழங்குவதாக புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது. அதனால் அடிப்படை சேவைகள் மற்றும் மனித உழைப்பு அப்பாற்பட்டு தொழிலார்களை தனியார் மயமாக்குதலுக்குச் சாத்தியமாகிறது. கார்ப்ரேட் நிறுவனங்களின் லாபம் பார்க்கும் பந்தயத்தில் பொருளாதாரம் கடுமையான பொருளாதார சீர்நிலையற்ற நிலையை உருவாக்குவதுடன் தாராளமய பொருளாதாரக் கொள்கை நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது.
ஆகையால், சமூக நீதி மற்றும் சாதாரண மக்களுக்கு நல்வாழ்வளிக்கும் சமுதாயத்தைப் புதுப்பிக்க வேண்டும் என விரும்பினால் மக்களின் நல்வாழ்வை நசுக்கும் வகையில் இயங்கும் பெருநிறுவன இலாபங்களைப் பற்றி அக்கறை கொண்டிருக்கும் புதிய தாராளவாத கொள்கையை
உடைக்க வேண்டும்.
தேசிய தினம் கொண்டாட்டத்தில் திளைத்திருக்கும் இந்த நேரத்தில் வெறுமனே தேசபக்தி உணர்வு ஏற்படுத்தக்கூடிய வரிகளான 'நாட்டின்மீது அன்பு செலுத்துவோம்' அல்லது மலேசியாவை நேசிப்போம் போன்ற வரிகள் ஓர் சமூகத்தை கட்டியெழுப்பாது.
நாட்டைக் காப்பாற்ற இரு தலைவர்களின் அதிகாரத்தை மக்கள் சார்ந்தே இருப்பார்களேயானால், உண்மையில், நமது மக்கள் சுதந்திரமடைந்தவர்களாக இருக்கமாட்டார்கள். நேர்மையற்ற முறையில் பணம் சம்பாதித்திக்கும் பிரச்சனையுடன் நம் சமுதாயம் இன்னமும் பாதிக்கப்படுமேயானால் நமது மக்கள் சுதந்திரமடைந்தவர்களாக இருக்கமாட்டார்கள். நமது அரசாங்கமானது, பொது மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களுடன் வர்த்தக உடன்படிக்கைக்கு இணங்குமாயின், நமது மக்கள் சுதந்திரமடைந்தவர்களாக இருக்கமாட்டார்கள்.
உண்மையான சுதந்திரத்தை அடைவதற்கு, நமக்குத் தேவையானது:
-மனித உரிமைகளைப் புரிந்துகொள்வதற்கும், மனித உரிமைகளை வென்றெடுப்பதற்கும், அரசியல் கல்வியை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்.
-சமூக அமைப்புகள் உதாரணத்திற்கு (தொழிற்சங்கங்கள், முற்போக்கு அரசியல் கட்சிகள், வெகுஜன இயக்கங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் போன்றவை) மூலம் மக்களது அதிகாரத்தை மேம்படுத்துதல் மற்றும் ஜனநாயகத்துடனும் தொடர்புப்படுத்த வேண்டும்.
-அரசாங்கம் பொது மக்களுக்கு உண்மையிலேயே பொறுப்பாகவும், அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை நடைமுறைப்படுத்தவும் அனைத்து அரசாங்கக் கொள்கைகளையும் எப்போதும் கண்காணிக்கவும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
-எழுத்து - சூ சூன் காய் (2019)
தமிழ் மொழிபெயர்ப்பு - யோகி
தமிழ் மொழிபெயர்ப்பு - யோகி
(சமத்துவத்தை நோக்கி புத்தகத்திற்காக)
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு