மூன்றாவது
முறையாக
இன்று உன்னை
பிரிகிறேன்
பிரிதல் உனக்கும்
ஓர் ஓவியத்துகான
புள்ளியை
கொடுக்கலாம்
புள்ளிகளைக்
கோடுகள் ஒன்றினைக்கலாம்
நீ அவற்றுக்கு
வர்ணம் தீட்டி
அழகான படம்
வரைந்து காட்டி
அதைக்
காட்சிக்கு
வைக்கலாம்
என் அன்பே
ஓர் ஓவியனின்
ஓவியம் போல் இல்லை
இந்த பிரிவு
அதை எப்போது நீ
அறிவாய்?
நீ கொண்டாடும்
வான் கோவும், ஆதி மூலமும்,
காஜா மேனும்
உன் தூரியை
எடுத்து
இப்பிரிவை
தீட்டப்போவதில்லை
என் அன்பே
நீ அறிவாயா
இந்த மூன்றாவது
பிரிவில்
இரு தினங்களுக்கு
முன்
இலையுதிர் காலம் தொடங்கியது
இலையுதிர் காலம் தொடங்கியது
பாதி இலை
உதிர்ந்த
அந்த நிழல் மரத்தில்
அந்த நிழல் மரத்தில்
அமரும் சாம்பல்
நிறப்பறவை
சொல்லும் செய்தியை
சொல்லும் செய்தியை
நீ அறிவாயா
என் அன்பே
இன்று
மூன்றாவது
முறையாக உன்னை பிரிகிறேன்
என்பதை…
நான் உன்னைவிட்டு பிரிவதுமில்லை கைவிடுவதுமில்லை'ன்னு ஒங்க ஆத்துக்காரர் அந்தப்பக்கம் சொல்லிகிட்டு இருக்காருங்க :) இப்படியே கவிதை சொல்லி ஓட வச்சிராதீங்க
பதிலளிநீக்குNice =)
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு