டத்தோ லீ ஆட்டக்களத்தில் |
பூப்பந்து அரங்கின் வழி நமது நாட்டிற்கு வெற்றிமாலை சூட்டி அழகு பார்த்தவர். தனது அபார விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி லீ சோங் வேய் உலக நாடுகளின் கண்களுக்கு மங்கலாக தெரிந்த மலேசியாவை இன்னும் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
டத்தோ லீ தனது விளையாட்டு எதிரியான லின் டான்னுடன் |
உண்மையில் அவர் குறிவைத்து விளையாடிய தங்கப் பதக்கத்திற்கான அந்தப் போட்டி, அரங்கம் தீ பற்றி எரியாத ஒரே குறைதான். அந்த அளவுக்கு சூடு பிடித்த விளையாட்டு அது. இறுதியில் சீனாவின் முதல் நிலை ஆட்டக்காரரான லின் டான் தங்கப் பதக்கத்தை வெற்றிக்கொள்ள லீ-க்கு வெள்ளிப் பதக்கம்தான் கிடைத்தது. அன்று முதலே பூப்பந்து விளையாட்டின் எதிரிகளாக லின் டானும், லீயும் ஆனார்கள் எனலாம். நாட்டிற்கு வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுதந்ததைப் பாராட்டி பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், லீ-க்கு டத்தோ விருது வழங்கிச் சிறப்பித்தார்.
தொடர்ந்து, டத்தோ லீ பல போட்டிகளில் பங்கெடுத்து வெற்றிமாலைகளை சூடினார். அவருக்கு மற்றுமொரு எதிரியாக ஜப்பான் விளையாட்டாளர்கள் வந்தார்கள். டத்தோ லீக்கு சீனாவும், ஜப்பானும்தான் போட்டி விளையாட்டாளர்களாக அமைந்தார்கள்.
டத்தோ லீயின் வெற்றி வாய்ப்புக் குறித்து அதிகம் விமர்சிக்கப்பட்ட ஆண்டாக 2011-ஆம் ஆண்டைச் சொல்லலாம். காரணம் தோமஸ் கிண்ணப் பூப்பந்தாட்டம் அது. நமது சொந்த நாட்டில் நடந்த அந்த பூப்பந்தாட்டத்தில் டத்தோ லீ தங்கத்தை பெற்றுத் தருவார் என்று மலேசிய வாழ் ஒட்டுமொத்த மக்களும் நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால், மிகப் பெரிய தோல்வியை டத்தோ லீ சொங் வேய் சந்தித்ததை அந்த விளையாட்டைப் பார்த்த யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதே வேளையில், தேசிய பூப்பந்தாட்ட ஆணையத்தின் மீதும் பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. பூப்பந்தாட்டத்திற்காக பல்வேறு வசதி வாய்ப்புகளையும் ஊக்குவிப்புத் தொகைகளையும் அரசாங்கம் மானியமாக வழங்கும்போது ஏன் இந்த நிலை ஏற்பட்டது? என்று கேட்கப்பட்டதோடு, டத்தோ லீயைக் கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாக்கியது. அவரின் செல்வாக்கும், அவரின் மீதான நம்பிக்கையும் குறையத் தொடங்கிய நாளென்றுகூட சொல்லலாம்.
அதன் பிறகு டத்தோ லீக்கு அமைந்தது அனைத்தும் சோதனைக் களமாகவே அமைந்தது. அவர் வெற்றி பெறுவார் என்றும் தோல்வியடைவார் என்றும் விளையாட்டில் ஈடுபடும் முன்பே விமர்சிக்கப்படத் தொடங்கினார்.
இவ்வருடம் முழுதுமே டத்தோ லீ பல விமர்சனங்களைச் சந்தித்தார். அதன் உச்சக் கட்டம்தான் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியது. கடந்த ஆகஸ்டு மாதம் டென்மார்க்கில் நடைபெற்ற உலகப் பூப்பந்து கூட்டமைப்பின் அனைத்துலக சாம்பியன்ஷிப் போட்டியின் போது, டத்தோ லீ சோங் வேய் உடலில் ‘dexamethose' என்ற ஊக்கமருந்து கலந்திருப்பது இரு வாரங்களுக்கு முன்பு, நார்வே, ஆஸ்லோவில் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து அவருக்கு எதிரான முடிவு கிடைத்ததையடுத்து உலகப் பூப்பந்து கூட்டமைப்பு அவரை இடைநீக்கம் செய்தது யாரும் எதிர்பார்க்க்காத ஒன்றாகும்.
இதனையடுத்து இவ்விவகாரத்தை உலகப் பூப்பந்து கூட்டமைப்பு ஊக்கமருந்து விளக்கமளிப்பு குழுவிடம் கொண்டு சென்றது. ஆனால், டத்தோ லீ, தாம் போட்டியில் வெல்ல எந்தப் போதை மருந்தையும் எடுத்துக்கொள்ளவில்லை என கருத்து வெளியிட்டார்.
இளைஞர் விளையாட்டுத் துறையமைச்சர் கைரி ஜமாலுடின் |
டத்தோ லீ தனது பயிற்றுனரான ரசிட் சிடேக்வுடன் |
டத்தோ லீ தனது பயிற்றுனரான மிஸ்புன் சிடேக்வுடன் |
இதற்கிடையில், டத்தோ லீ மீது இருமுறை மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனைகளில், சோங் வேய் அம்மருந்து பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் காணப்பட்டது உறுதிப் படுத்தப்பட்டது என பூந்துபந்து சம்மேளனம் அதிகாரப்பூர்வத் தகவலை வெளியிட்டது. மேலும், டத்தோ லீ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளார், என உலகப் பூப்பந்து கூட்டமைப்பு (பிடபள்யஃஎப்) தெரிவித்தது. தன்மேல், விழுந்த பழியைத் துடைப்பதற்குத் தவறிய டத்தோ லீ நிலைகுலைந்துதான் போனார். இந்நிலையில்தான் கடந்த வாரம் தனது நிலைப்பாட்டை வெளிபடுத்தினார் டத்தோ லீ சொங் வேய்.
“நான் மருத்துவர்களை முழுமையாக நம்பினேன். தற்போது காலம் கடந்து யோசிப்பதில் எந்தப் பயனும் இல்லை. நம் உடலில் செலுத்தப்படும் மருந்து குறித்து விளையாட்டாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நம் உடலில் செலுத்தப்படும் மருந்து குறித்து எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்கு நானே ஓர் உதாரணம். நான் மருத்துவம் அறியாதவன்; பூப்பந்தில் எத்தனை இறகுகள் இருக்கும் என்பதும், களத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை மட்டுமே அறிந்தவன் நான்” என்று டத்தோ லீ தெரிவித்துள்ளார்.
தேசிய அணியில் டத்தோ லீ சோங் வேய்க்கு அடுத்து சிறந்த இளம் ஒற்றயர் ஆட்டக்காரர்களை மலேசியப் பூப்பந்து சங்கம் கண்டறிய வேண்டிய கடப்பாட்டினை தற்போது கொண்டுள்ளது. உண்மையில், இந்தத் தேடலை பல ஆண்டுகளுக்கு முன்பே பூப்பந்து சங்கம் மேற்கொண்டிருக்க வேண்டும் . இதுகுறித்து பல தடவை வலியுறுத்தப்பட்டுவிட்டது என்பதும் மறுப்பதற்கில்லை. பூப்பந்து என்றால், ஒற்றையர் பிரிவில் டத்தோ லீயையும், இரட்டையர் பிரிவில் கூ கின் கீட்- தான் புன் ஹியோங் ஆகியோர் நாட்டிற்கு பதக்கத்தை வென்று தருவார்கள்ன் என்பது மலேசியாவின் எதிர்பார்ப்பாக அவர்கள் மேல் திணிக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் அவர்களை எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கும், தர்ம சங்கடத்திற்கும் ஆளாக்கும் என்பது நமக்குச் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
கூ கின் கீட்- தான் புன் ஹியோங் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக